கன்னிராசி மண்டலத்தில் புதிய கருந்துளை.
இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பு.
தம்முள் புகும் ஒளி, மின்காந்த அலைகள் உட்பட எதுவும் மீண்டும் வெளிவராத அளவு அடர்த்தியும், ஈர்ப்பு சக்தியும் கொண்ட ' பிளாக் ஹோல் '
எனப்படும் கருந்துளைகள் விண்ணில் ஏராளமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். விண்ணில் மிதக்கும் தூசு மற்றும் இதர மாசுக்களால் இந்த கருந்துளைகள் மூடப்பட்டிருப்பதால் இந்த கருந்துளைகளை காண முடிவதில்லை.
இருப்பினும் இந்த கருந்துளைகள் தனது அருகில் உள்ள நட்சத்திர மண்டலங்களை தனக்குள் ஈர்த்துக் கொள்ளும்போது அதனால் ஏற்படும் வெப்பத்தால் கருந்துளையில் இருந்து கதிர்வீச்சுக்கள் வெளியாகும். இந்த கதிர்வீச்சுக்களை கொண்டு விஞ்ஞானிகள் கருந்துளைகளை கண்டுபிடிக்கின்றனர்.
இந்நிலையில், கன்னிராசி மண்டலத்தில் சூரியனைக்காட்டிலும் பல ஆயிரம் மடங்கு அடர்த்தி வாய்ந்த பிரம்மாண்டமான கருந்துளை இருப்பதை கண்டுபித்துள்ளனர். யுகே இன்பராரெட் டெலஸ்கோப் ( யுகேஐஆர்டி ) எனப்படும் அதிநவீன டெலஸ்கோப் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளைக்கு யுஎல்ஏஎஸ்ஜே 1234+0907 என்று பெயரிட்டுள்ளனர். இது தொடர்பான கட்டுரையில்: பூமியில் இருந்து வெகு தொலைவில் உள்ள இந்த கருந்துளையில் இருந்து வெளியாகும் ஒளி பூமியை வந்தடைய ஆயிரத்து 100 கோடி ஆண்டுகள் ஆகும் . இதுபோன்று விண்ணில் 400க்கும் அதிகமான பிரம்மாண்ட கருந்துளைகள் இருக்கலாம் என்று நம்புகிறோம். ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் ஒரு கருந்துளை இருக்க வாய்ப்பு உள்ளது என்கிறது..
-- தினமலர் . 11- 10 - 2012.

No comments:
Post a Comment