விருச்சிக ராசி மண்டலத்தில் வைரக்கோள்.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதன் தலைமையிலான பிரான்கோ ஆராய்ச்சிக்குழுவினர், விருச்சிக ராசி
நட்சத்திர மண்டலத்தில் பூமியின் குறுக்களவை போல் 2 மடங்கு பெரிய வைரக் கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ' 55 கேன்சரி இ' என்று பெயரிட்டுள்ளனர்.
இது குறித்து ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் நிக்கு மதுசூதன் கூறுலையில் ' கடினமான பாறைகள் மற்றும் கிராபைட்டால் ஆன, பூமியின் குறுக்களவை போல் 2 மடங்கு பெரியதும், செவ்வாய் கிரகத்தை போன்று 8 மடங்கு பெரிய கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளோம். விருச்சிக ராசி மண்டலத்தில் உள்ள சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை ' 55 கேன்சரி இ' என்ற வைரக்கோள் சுற்றிவருகின்றது. அந்த கோள் பூமியைவிட வேகமாக 18 மணி நேரத்தில் அந்த நட்சத்திரத்தை சுற்றிவருகிறது.
இந்த கிரகத்தின் மேற்பரப்பில் 3 ஆயிரத்து 900 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவுகிறது. பூமியை காட்டிலும் வித்தியாசமான வேதியியல் கலவையால் ஆன இந்த கோளை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளோம். சிறிது நேரமே அந்த கோளை பார்க்கமுடிந்தது. இருப்பினும் இந்த அளவுக்கு பெரிய வைரக்கோள் கண்டுபிடித்துள்ளது இதுவே முதல்முறை என்றார்.
-- தினமலர். அக்டோபர் 13, 2012.

No comments:
Post a Comment