Wednesday, January 21, 2015

மனசாட்சி.

  மனசாட்சி  என்பது  இதயத்தின்  ஆத்மா,  மனித  இதயத்திலிருந்து  சுடர்விட்டு  வழிகாட்டும்  ஒரு  பேரொளி.  வாழ்க்கை  எப்படி  உண்மையோ  அதைப்போன்றது  அது.  நேர்மைக்குப்  புறம்பாகச்  சிந்தித்தாலோ,  நடந்தாலோ  அது  தன்  எதிர்ப்பைக்  காட்டும்.
     மனசாட்சி  என்பது  நமது  பாரம்பரியத்தில்  வந்து  உதித்த  ஒன்று.  தப்பையும்  சரியானவற்றையும்  நமக்குச்  சரியான  நேரத்தில்  உணர்த்தும்  ஓர்  அறிவார்ந்த  மரபணு  உண்மை.  நமது  குற்றங்களைப்  பதிவு  பண்ணும்  ஓர்  வாழ்க்கைப்  புத்தகம்.  அது  நம்மைப்  பயமுறுத்தும்,  நம்பிக்கை  கொடுக்கும்,  பாராட்டும்,  தண்டனை  அளிக்கும்.  நம்மைக்  கட்டுக்குள்  வைக்கும்.  ஒரு  தடவை  மனசாட்சி  உறுத்தினால்  அது  எச்சரிக்கை.  மறுமுறை  உறுத்தினால்  அது  தண்டனை.
     ஒரு  நிகழ்வு  நடந்தால்  --  கோழை  கேட்பான்  இது  பாதுகாப்பானதா  என்று  --  பேராசைக்காரன்  கேட்பான்  இதனால்  எனக்கு  என்ன  லாபம்  என்று  --  தர்பெருமைக்காரன்  கேட்பான்  நான்  மகானாக  முடியுமா  என்று  --  இச்சையாளன்  கேட்பான்  அதில்  என்ன  சந்தோஷம்  உண்டு  என்று  --  ஆனால்  மனசாட்சி  ஒன்றுதான்  கேட்கும்  அது  சரியா  என்று.  ஆனால்,  ஒட்டு  மொத்தமான  பதில்  என்ன  தெரியுமா?  ஒரு  மனிதன்  தன்  மனசாட்சிப்படி  நடப்பது  ஒன்றுதான்.
-- முன்னாள்  குடியரசுத்தலைவர்  A.P.J.அப்துல்கலாம்  அவர்களின்  உரையிலிருந்து.
-- R.அஜாய் குமார், T.G.T.  MAGGHS,  KARAIKKAL., ஆசிரியர்  நண்பன்,  ஆகஸ்ட்  2012.
--  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.  

No comments: