1905 ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பிராங்க் எபெர்சன் வீட்டில் சோடா தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக பல முயற்சிகளை கையாண்ட அவர், வீட்டுக்கு வெளியே ஒரு பாத்திரத்தில் அவற்றை ஊற்றி ஒரு குச்சியை வைத்து கலக்கிக் கொண்டிருந்தார். பின்னர் இரவில் சீதோஷ்ண நிலை மாறி பனிகொட்டியது. அடுத்த நாள் காலையில் அவர் அதை பார்க்க நேர்ந்தபோது, அது அப்படியே குச்சியுடன் இணைந்து ஐஸ் ஆனது. 11 வயது நிரம்பிய எபெர்சன் அதை பெரிய கண்டுபிடிப்பாக கருதவில்லை. ஆனால், அவருக்கு 18 வயதானபோது, அவருக்கு அது நினைவுக்கு வந்தது. இதனால் அதே பணியில் 7 வகையான பழரச சுவையுடன் குச்சியில் செருகி குச்சி ஐஸ் விற்பனையைத் தொடங்கியதோடு, அவற்றுக்கு காப்புரிமையையும் பெற்றார்.
-- தினமலர். சண்டே ஸ்பெஷல். 5-1-2014.
-- தினமலர். சண்டே ஸ்பெஷல். 5-1-2014.
No comments:
Post a Comment