Saturday, October 31, 2015

சிதம்பரம் நடராஜர் கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுடையது இல்லை;  அரசு மீட்க வேண்டும்.
     2,000 ஆண்டுகளுக்கு முன்னர் சிதம்பரத்தில் கோயில் இருந்ததற்கான எவ்வித வரலாற்று ஆதாரமும் கிடையாது.  இப்போதுள்ள மேற்குக் கோபுரம் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனாலும், வடக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயராலும், கிழக்குக் கோபுரம் இரண்டாம் கோப்பெருஞ்சிகனாலும், தெற்குக் கோபுரம் முதலாம் கோப்பெருஞ்சிகனாலும், எழுப்பப்பெற்றவை.
     முதலாம் ஆதித்ய சோழன்தான் சிதம்பரத்துக்கு முக்கியத்துவம் தந்து, அதை சோழப் பேரரசின் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கான மையமாக மாற்றினான்.  படையெடுப்பின்போது கவர்ந்துவந்த ஏராளமான பொன்னைக் கொண்டு அவனும் அவனது மகன் பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் வேய்ந்தனர்.
     சிதம்பரத்தை வைதீகமரபோடு பிணைத்து சமஸ்கிருதத்தில் ஸ்தலபுராணம் எழுதப்பட்டது. 'சிதம்பர மஹாத்மியம்' என்ற நூலில் சிதம்பரம் எட்டுமைல் சமசதுரம் உள்ளதெனவும், அழகிய நான்கு கோபுரங்களைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுவதால், கோபுரங்கள் கட்டப்பட்ட பின்னரே இந்த வடமொழி நூல் இயற்றப்பட்டிருக்கவேண்டும் என யூகிக்கலாம்.
-- ரவிக்குமார் . விவாதக் களம்.
-- ' தி இந்து; நாளிதழ்.வியாழன், ஜனவரி 9, 2014.  

No comments: