( சிறப்பு )
நவராத்திரிப் பண்டிகை என்று ஒன்பது நாட்களைக் குறிக்கும் இப்பண்டிகையைக் கொலுப்பண்டிகை என்ற பெயரிலும் பொருத்தமாக அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச்சிறப்பு.
படி ஒன்று :......ஓரறிவு உயிரிகளான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளைப் படி ஒன்றில் வைக்கப்பட
வேண்டும். தவிரப் பொதுவாகக் கொலு வைக்கும் இல்லங்களில் பூங்கா அமைப்பது உண்டு.
படி இரண்டு:....ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் அந்த காலத்தில் திண்ணைகளில் அமர்ந்து சோழி
உருட்டி விளையாடுவது வழக்கம். இந்தச் சோழிகளையும், சோழிகளால் செய்யப்பட்ட பொம்மைகளையும்
இந்தப் படியில் வைக்கலாம்.
படி மூன்று :.....மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு, சிறு பூச்சிகள், மண் புழு ஆகியவற்றின் பொம்மைகள்.
படி நான்கு :.....நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு, பட்டா,பூச்சி ஆகியவற்றின் பொம்மைகள்.
படி ஐந்து :........ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்.
படி ஆறு :.........ஆறறிவு மனிதர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். சாதனையாளர்கள், உலகத் தலைவர்கள்
ஆகியவற்றை வைத்தால், இல்லத்திற்கு வரும் விருந்தாளிகள் அச்சிலையில் உள்ளவர்களின் சாதனைகளை
நினைவுகூற முடியும்.
படி ஏழு : ..........மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் ராமகிருஷ்ண பரமஹம்சர்,
விவேகானந்தர், ரமணர், வள்ளலார் முதலானோரின் பொம்மைகள்.
படி எட்டு :........தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள், நவக்கிரக அதிபதிகள், இந்திரன், சந்திரன் ஆகிய தெய்வ உருவங்களை
மண் பொம்மைகளாக வைக்கலாம்.
படி ஒன்பது : பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியொரின் சிலையுடன் அவ்வவர்களின் தேவியருடன் அமைந்திருக்குமாறு இந்த
மேல் உச்சிப்படியில் வைக்க வேண்டும். இவற்றின் நடுவில் ஆதிபாராசக்தி இருக்குமாறு அமைக்க
வேண்டும்.
-- விக்னேஷ் ஜி.
-- 'தி இந்து' நாளிதழ். ஆனந்த ஜோதி இணைப்பு. வியாழன், அக்டோபர் 8, 2015.

No comments:
Post a Comment