பூமியின் ஆழத்தில் பரந்து கிடக்கும் நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு
எதிர்காலத்தில், கோடிக்கணக்கான மக்களின் தாகத்தை தீர்ப்பதற்குத் தேவையான நீர் ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகள், பூமிக்கு உள்ளே, உலகின் மிகப் பெரிய, கடலைப் போன்று மூன்று மடங்கு அதிகமான நீர் ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
பிரேசிலில் உள்ள ஒரு எரிமலையில் இருந்து வெளியேறிய கற்களில், ஒரு சதவீதத்துக்கு, தண்ணீர் இருந்ததை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து, வட அமெரிக்காவின் நிலப்பரப்பிற்குக் கீழ், எரிமலைக் குழம்புகளாலான பாறைகள் நிறைந்துள்ளதையும், அப்பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தையும் கண்டுபிடித்தனர். பூமிக்கடியில், 640 கி.மீ., ஆழத்தில், பாறை இடுக்குகளில், தனிம மூலக்கூறு வடிவில் தண்ணீர் நிறைந்துள்ளது.
இதன் மூலம், பூமிக்கடியில் பரந்த அளவில் தண்ணீர் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய முழுக் கடலளவை விட மூன்று மடங்கு அதிக தண்ணீரைக் கொண்டதாக உள்ளது.
-- தினமலர் சென்னை. ஞாயிறு 15-6-2014.
No comments:
Post a Comment