Sunday, October 9, 2016
காஷ்மீர்
காஷ்மீருக்கு தனி அந்தஸ்து தேவையா?
இப்போதைய சிறப்பு அந்தஸ்துப்படி, ஜம்மு - காஷ்மீர், ஒரு மாநிலமாக இருந்தாலும், தனி நாடு போன்றே, அதிகாரங்களை பெற்றுள்ளது. வெளிமாநிலத்தவர் யாரும், அங்கு நிலம் வாங்க முடியாது.
மத்திய அரசின், ராணுவம், உள்துறை போன்ற சில துறைகளின் செயல்பாடுகள்தான், இந்த மாநிலத்தை கட்டுப்படுத்தும். மத்திய அரசின் பல சட்டத்திட்டங்கள், இங்கு செல்லுபடியாகாது. உதாரணமாக, கல்வி உரிமை சட்டம், சிறுபான்மையினருக்கான சலுகைகள், பஞ்சாயத்துக்கள், மாநகராட்சிகளுக்கான அதிகாரங்கள் இந்த மாநிலத்தில் செயல்படாது.
இந்திய அதிகார சட்டங்கள், குற்ற ஒழுங்குமுறை சட்டம், மனித உரிமைகள் சட்டம், சி.பி.ஐ.,யின் செயல்பாடுகள் போன்றவையும், இந்த மாநிலத்திற்கு பொருந்தாது. மத்திய அரசின் விசாரணை கமிஷன்கள், இங்கு விசாரணை நடத்த இயலாது.
பார்லிமென்ட் வழியாக, மற்ற மாநிலங்களூக்கு சட்டம் இயற்றும், ஜம்மு - காஷ்மீர் மாநில மக்கள் பிரதிநிதிகள், அந்த சட்டத்தை, இங்கு செயல்படுத்த முடியாது. இங்கு தேசியக் கொடியோடு, காஷ்மீருக்கான கொடியும் உள்ளது. இங்கு பதவி ஏற்கும் மக்கள் பிரதிநிதிகள், இந்தைய அரசியல் சட்டத்தின்படி பதவியேற்பது இல்லை.
இங்குள்ள மக்கள், வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால், காஷ்மீர் குடிமகன் என்ற அந்தஸ்தை இழப்பர். இது குடிமகனின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
மற்ற மாநிலங்களில், சட்டசபையின் பதவிக் காலம், ஐந்து ஆண்டுகள் என்றால், இங்கு ஆறு ஆண்டுகள். இந்த மாநிலத்தில், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே, மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க முடியும். மற்றவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட ஆக முடியாது. ஆனால், லோக்சபா தேர்தலில், இங்கு வசிப்பவர்கள் ஓட்டளிக்கலாம்.
இப்படி, அரசியல் சட்டத்தின் படி , ஏராளமான சலுகைகள் தரப்பட்டு உள்ளன. இது தேவையா?
-- கே.ஆர். ஆல்பர்ட், , சென்னை.
-- தினமலர் சென்னை. ஞாயிறு 15-6-2014.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment