Wednesday, October 12, 2016

"உயிர்க்கொலை"


"உயிர்க்கொலை செய்து உணவாக அருந்துவது பாவம் இல்லையா?"
"தர்ம வியாதர்னு ஒரு துறவியை கௌசிக முனிவர் சந்திச்சு பல தத்துவ விளக்கங்கள் கேட்கிறார். அதே தர்ம வியாதர் காலையில் சந்தையில் மாட்டு இறைச்சி விக்கிறார். 'அய்யா, உயிர்க்கொலை பாவம் இல்லையா?னு கௌசிக முனிவர் கேட்டார். 'எங்க பரம்பரைத் தொழிலை நான் செய்கிறேன். இதில் தப்பு இல்லை. இந்த உலகத்தில் வலிமையான உயிர்கள், பலவீனமான உயிர்களை அடிச்சுச் சாப்பிடுகிறது இயற்கை நியதி. எலியை பூனையும், பூனையை நாயும், நாயை ஓனாயும், மானைப் புலியும் அடிச்சு சாப்பிடுது. ஒரு ஆட்டைக் கொலை பண்ணா, ஒரு உயிர்தான் போகுது. ஒரு கை சாதத்துல உயிருள்ள சுமார் 500 நெல் வெந்து அரிசியாகியிருக்கு. ஒரு நெல்லும் உயிருள்ளதுதான்; ஒரு ஆடும் உயிருள்ளதுதான். நெல்லுக்கு உயிர் இருக்குனு, நாம சாப்பிடாம இருக்க முடியுமா? 500 வருஷ ஆலமரம் கீழே விழுந்து மண்ணோட மக்கிப்போகும்போது, அந்த ஆலமரத்தின் சாற்றை உண்டுதான் புதுச் செடி முளைக்கிறது. ஆக, உயிர்க்கொலை தவிர்க்க முடியாது'னு சொன்னாராம். இது மகாபாரதக் கூற்று.
என்னைக் கேட்டா, 40 வயசு வரைக்கும் உடல் பலத்துக்கு அசைவம் சாப்பிடுங்க. அப்புறம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சைவத்துக்கு மாறிடுங்க!"
-- விகடன் மேடை. ( வாசகர் கேள்விகள்... சிவகுமார் பதில்கள்.)
-- ஆனந்த விகடன். 6-8-2014.

No comments: