Sunday, October 30, 2016

'மெனோபாஸ்'

ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்த்தியதில் இருந்து, தோராயமாக 35 வருடங்களாகவது, மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்களை கொஞ்சம் பயம், கொஞ்சம் சுகவீனம் கலந்தே நகர்த்தி வருகிறார்கள். 47-51 வயதை எட்டும்போது மாதவிடாய் நின்று, 'இனிமேல் இது இல்லை,' என்ற விடுதலையைத்தான் 'மெனோபாஸ்' என்கிறார்கள். இது நல்ல உடல்வாகைப் பெற்றிருக்கும் 35 சதவிகிததுக்கும் குறைவான பெண்களுக்குத்தான், மீதமுள்ள 65 சதவிகிதத்தினர் இந்த நாட்களில் படும் அவஸ்தைகள், அனுபவித்தால் மட்டுமே புரியும். சாதாரண ரத்தசோகையில் இருந்து, வாந்தி, தலைவலி, பிழியும் வயிற்று வலி, வயிற்று உப்புசம் ... என உபாதைகள் அவஸ்தையாக, 'சனியன் ... இது எப்போ ஒழியும்?' என்று உதிரத்துக்கு முன்னதாகவே கண்ணீர் ஊற்று எடுக்க, இறுதி யுத்தத்துக்குக் காத்திருப்பார்கள். உடலும் மனமும் வதைபடும் இந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும், எதைச் சாப்பிட்டால் மீண்டும் புத்துணர்வு பெறலாம், இது நோயா... அல்லது வெறும் பயமா? ஏராளமான சந்தேகங்கள் மெனோபாஸ் பருவப் பெண்களை அலைக்கழிக்கும். ஆங்கிலத்தில் இதனை Empty nest syndrome என்பார்கள்.
-- மருத்துவர் கு. சிவராமன். ( நலம் 360 0 தொடரில் ) .
-- ஆனந்த விகடன், 18-07-2014.

No comments: