"மறக்க முடியாத வாசகம் ?"
" குடலில் ஒரு அவுன்ஸ் மலமும், மூளையில் ஒரு அவுன்ஸ் அவமானமும் மிச்சம் இல்லாத மனிதன் எவனும் இல்லை!"
"புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்போது என்ன எழுதித் தருவீர்கள்?"
"சிறகிருந்தால் போதும்
சிறியதுதான் வானம்!"
"நீங்கள் ரசித்துக்கேட்ட அனுபவ மொழி?"
"முஸ்லீம் பெரியவர் ஒருவர் சொன்னது. 'நீ ராஜாவோ... பிச்சைக்காரனோ... உண்டது, உடுத்தது, கொண்டது, கொடுத்தது...
இந்த நாலும்தான் மிச்சம்'!"
"மனிதனின் உண்மை முகம் எது?"
"எந்தத் துறையில் ஒருவன் பொருள் ஈட்டினானோ அல்லது புகழ் ஈட்டினானோ, அந்தத் துறையைக் கழித்துவிட்டு மிச்சப்படுவது எதுவோ அது!"
"ஒரு குறுங்கதை சொல்ல முடியுமா?"
"பார்வையற்ற பெண்ணைக் காதலித்தான் ஒருவன். 'பார்வை கொடுத்தால் உன்னையே மணப்பேன்' என்றாள் அவள். அவனும் பார்வை கொடுத்தான். கண்திறந்து பார்த்தவள் தன் காதலன் கண் இல்லாதவன் என்பதை கண்டு, 'நான் உன்னை மணக்க மாட்டேன்' என்று மறுத்துவிட்டாள். காதலன் கண்ணீரோடு முணுமுணுத்தான், 'என்னை நிராகரித்தவளே... என் கண்ணை நிராகரிக்க முடியாதல்லவா!"
"உங்கள் வர்ணனையில் உங்களுக்குப் பிடித்த வரிகள்?"
" 'சோழன் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்.
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்!"
-- வைரமுத்து 60 கேள்விகள்.
-- ஆனந்த விகடன், 18-07-2014.
No comments:
Post a Comment