மைக்ரோசாஃட் நிறுவனம் விரைவிலேயே ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகப்படுத்த உள்ளது. 1.5 அங்குலம் திரை கொண்ட இந்த கடிகாரத்தின் பேட்டரிகள் 2 நாட்கள் வரை நீடிக்கும். இந்த கடிகாரத்தை அணிந்திருப்பவரின் இதயதுடிப்பை அளவிடும் தொழில்நுட்பம் இதில் உள்ளது.
காபி விற்கும் ரோபோ
ஜப்பானின் சாஃப்ட்பேங்க் நிறுவனம் பெப்பர் என்ற பெயரில் ரோபோவை உருவாக்கியுள்ளது. காபி விற்பனை மையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ரோபோவின் மார்பில் உள்ள தொடு திரை கணினியில் தேவையானதை பதிவு செய்தால் காபி உங்கள் கைகளுக்கு வரும்.
குரல் கொடுத்தால் தண்ணீர் கொதிக்கும்
குரல் கொடுத்தால் போதும் சமையலறையில் தண்ணீர் கொதிக்கும், சமையல் நடக்கும் இதற்கான தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது பானசோனிக். இந்த இயந்திரங்களை குரல் மூலம் செயல்படுத்தலாம். மேலும் மேஜிக் கண்ணாடி ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கண்ணாடி முன் நின்றால் உங்கள் உடல்நிலை குறித்த புள்ளிவிவரங்களை சேகரித்துக் கொள்ளும். அனிந்திருக்கும் ஆடை எந்த வண்ணத்தில், ஒளியில் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கும். முழுவதும் குரல்வழியில் செயல்படும் சமையலறையை உருவாக்கும் ஆராய்ச்சியில் இந்நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது.
-- வணிக வீதி.
-- 'தி இந்து' நாளிதழ். இணைப்பு. திங்கள், டிசம்பர் 15,2014.

No comments:
Post a Comment