கன்னியாகுமரியில் பிறந்து , கேரளத்தில் தவழ்ந்து , கர்நாடகாவில் தொடர்ந்து , மகாராஷ்டிராவில் வளர்ந்து நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை . இப்படி 4 மாநிலங்களை தழுவி இருக்கும் இம்மலைத் தொடரில் 36 நதிகள் உருவாகின்றன . இதில் உருவாகும் நீரை முழுமையாகப் பயன்படுத்தினால் எந்த ஒரு காலக்கட்டத்திலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம் .அதுமட்டுமல்ல... மூன்று போகம் விவசாயம் செய்து விவசாயிகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்து தமிழகத்தையும் வளர்த்து விடுவார்கள் .
ஆனால் , இந்த நதிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரில் 15 சதவீதம் மட்டுமே பயன்படுத்திக் கொண்டு , மீதி 85 சதவீ தத்தை அரபிக்கடலிலும் . வங்கக்கடலிலும் வீணாகக் கலக்கவிடுகிறோம் . இயற்கை தரும் வளத்தை தக்க வைத்துக் கொள்ள தெரியாமல் , அதற்கான வழிமுறைகளைப் பற்றி சிந்திக்காமல் இன்னும் எவ்வளவு காலம் தான் தமிழக அரசு தண்ணீரை தேடி அலைந்து கொண்டிருக்கப்போகிறதோ தெரிய வில்லை .
--- மு . சம்பத்குமார் , கரூர் . தினமலர் .31 - 03 - 2009 .
No comments:
Post a Comment