ஒருவரிடமிருந்து விடைபெறும்போது ' வரேன் ' என்று சொல்லிவிட்டுப் போகும் பழக்கம் நம் ஊரில் உண்டு . ஆங்கிலேயர்கள் ' குட்பை ' சொல்கிறார்கள் . ' God be with you ' என்பதன் சுருக்கம் அது . பிரெஞ்சுக்காரர்கள் ஆட்யூ ( Adieu ) அல்லது au revoir என்பார்கள் . கிரேக்கர்கள் ' ஆடியோலிஸ் ' என்கிறார்கள் . எல்லாமே கடவுளைக் குறிக்கும் . ஜெர்மனியில் யூஃப்வைடர்ஸெஷன் என்பார்கள் . ரஷ்யாவில் -- டோஸ்வைடேனியா . சைனீஸ் -- லாய் சீயன் . சோனியா காந்தி இத்தாலியிலிருந்து இந்தியா வருமுன் பெற்றோரியம் ' அரைவெடொஸி ' என்று சொல்லியிருப்பார் . (' மறுபடியும் நாம் சந்திக்கும் வரை ' என்று அர்த்தம் ) . ஹவாய் தீவில் ' அலோஹா ' -- 'Love ' என்று பொருள் .!
பிலிப்பைன்ஸில் ஒரு நண்பரிடம் நான் விடைபெற்றபோது , ' ஸலாமத் ஜலான் ' என்றேன் . ' அமைதி உண்டாகட்டும் ' ' விடைபெறுகிறேன் ' என்னும் அர்த்தத்தில் ! ஜப்பானில் உலகப் புகழ்பெற்ற அழகிய வார்த்தை -- ஸயனோரோ ! அதாவது , ' என்ன செய்வது ...? நாம் தற்போதைக்கு பிரிந்தாக வேண்டும் ' என்கிற அளவுக்கு அர்த்தமுள்ள வார்த்தை அது ! துருக்கிய ' வரேன் ' தான் எனக்குப் பிடித்தது --
' கலீ...கலீ...'! அதற்கு ' சிரித்துக்கொண்டே... சிரித்துக்கொண்டே...' என்று பொருள் .
--- ஹாய் மதன் , ஆனந்தவிகடன் , 10 - 10 - 1999 .
No comments:
Post a Comment