Monday, August 31, 2009

சுவிஸ் வங்கி !

எந்த பொருளுக்கும் வரி போடவேண்டியது இருக்காது !
சுவிஸ் வங்கி கொடுத்துள்ள கணக்கு விவரங்களுக்குப் பின்னும் இந்தியா ஒரு ஏழை நாடு என்பதை நம்ப முடிகிறதா ? கறுப்பு பணம் பதுக்குவதில் போட்டி வைத்தால் சந்தேகமே இல்லாமல் , அதில் நம் நாட்டுக்குத்தான் முதலிடம் . கறுப்பு பணம் பதுக்கலில் கம்யூனிச நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் ரஷ்யா 2 -வது இடத்தில் இருக்கிறது .
உலக பொருளாதாரம் சரிவு அடைந்துள்ள நிலையில் , சுவிஸ் வங்கிகளில் தங்கள் நாடுகளை சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண முதலீடுகள் பற்றி தகவல் சொல்ல வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் சுவிஸ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்துள்ளன . ' இதில் எங்களுக்கு என்ன சிரமம் ? அந்தந்த நாடுகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்தால் இங்கு பணம் முதலீடு செய்பவர்களின் பட்டியலை தரத்தயார் ' என்று சுவிஸ் வங்கி அறிவித்து , பதுக்கியவர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது .
இதையடுத்து , கணக்குகளை சொல்லுங்கள் என்று எல்லா நாடுகளும் சுவிஸ் வங்கிக்கு அதிகாரப்பூர்வ கடிதங்களை எழுதியிருக்கின்றன . ஆனால் , நம்நாட்டின் சார்பில் கறுப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்கள் விவரங்களை இதுவரை மத்திய அரசு கேட்கவில்லை . அதற்கான முயற்சி நடந்திருப்பதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர் .
ஆனாலும் , நம்நாட்டை சேர்ந்தவர்கள் முறைகேடாக சம்பாதித்து சுவிஸ் வங்கியில் சேர்த்து வைத்திருக்கும் ரூ . 75 லட்சம் கோடி என்பது அம்பலமாகி இருக்கிறது . இது நம் நாட்டின் கடங்களை விட 13 மடங்கு அதிகமாகும் . இந்தப்பணத்தை பிரித்துக் கொடுத்தால் , நாட்டில் 10 வயதை தாண்டிய ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விடலாம் . இதெல்லாம் , நாட்டு மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து எடுத்துக்கொள்ளப்பட்ட பணம்தான் .
இந்த கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் இருந்து நம் நாட்டுக்கு திரும்ப கொண்டு வரப்பட்டால் உடனடியாக நம்நாட்டின் ஒட்டு மொத்த வெளிநாட்டுக்கடன்களையும் அடைத்து விடமுடியும் . எஞ்சியிருக்கும் தொகைக்கு கிடைக்கும் வட்டியானது , ஆண்டுதோறும் போடப்படும் மத்திய அரசு பட்ஜெட் நிதியை விட அதிகமாக இருக்கும் . எந்த ஒரு பொருளுக்கும் வரி விதிக்க வேண்டிய தேவையிருக்காது .
ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்துக்கு 80 ஆயிரம் பேர் செல்கின்றனர் . இதில் 25 ஆயிரம் பேர் அடிக்கடி சுவிட்சர்லாந்து செல்கின்றனர் . இவர்கள் எல்லோரும் குளுகுளு சுவிட்சர்லாந்தை சுற்றிப்பார்க்க சென்ற சுற்றுலாப்பயணிகள் அல்ல . பலரும் ' வங்கி ' வேலைக்காக சுவிட்சர்லாந்து சென்று வந்துள்ளனர் .
சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய வகையில் டாப் 5 !
1 . இந்தியா : ரூ. 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி .
2 . ரஷ்யா : ரூ. 23 லட்சத்து 50 ஆயிரம் கோடி .
3 . இங்கிலாந்து : ரூ. 19 லட்சத்து 50 ஆயிரம் கோடி .
4 . உக்ரைன் : ரூ. 5 லட்சம் கோடி .
5 . சீனா : ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி .
இந்தியாவை காப்பாற்றுவதற்கு யாராவது இருகிறார்களா ?
--- தினமலர் , 09 - 05 - 2009 .

2 comments:

kanavugalkalam said...

நாம் நாட்டில் ஒரு நல்ல தலைவன் இருந்தாலும் அந்த பணம் எல்லாம் நாம் மக்களுக்கு கிடைத்து இருக்கும் அப்படிபட்ட தலைவன் இல்லை இந்த திருநாட்டில்.....

க. சந்தானம் said...

kanavugalkalam அவர்கட்கு , வணக்கம் . தங்கள் கூற்று சரிதான் . நம் நாட்டில் ஒரு நல்ல தலைவன் இல்லையே ?!