தென்னகத்து நேதாஜி என்று எல்லோராலும் போற்றப்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் . தேவர் ஐயா , தேவர் பெருமான் என அழைக்கப்பட்டவர் . அவர் பெண்களை பெரிதும் மதிப்பவர் . பெண்ணை , பெண்மையை போற்றும் குணம் கொண்டவர் .
1955 ல் அவர் பர்மா சென்றிருந்தார் .அவருக்கு புத்தமதம் சார்பில் வரவேற்பு அளித்தனர் . அழைப்பை ஏற்று சென்றார் .அவர் அங்கு வந்த போது புத்தமதப் பெண்டிர் வரிசையாக மண்டியிட்டு அமர்ந்து தங்கள் கூந்தலை விரித்து தரையில் பரப்பினர் . அதன் மீது நடந்து சென்று இருக்கையில் அமர வேண்டும் என்றனர் . மிகச் சிறந்தவர்கள் என கருதுபவர்களுக்கு மட்டுமே இத்தகைய வரவேற்பு.
இந்த வரவேற்பு முறையில் தேவருக்கு உடன்பாடில்லை . அந்த ஏற்பாட்டை பார்த்ததும் பதறி விட்டார் . " நான் வணங்கும் தாய் போன்று பராசக்தியின் வடிவானவர்கள் பெண்கள் . அவர்கள் தலைமுடி மீது நான் கால் வைக்க மாட்டேன் " என கரங்கூப்பி மறுத்து விட்டார் . இதைக் கேட்டு புத்தமத துறவிகள் , பெண்கள் யாவரும் வியந்து , மகிழ்ந்தனர் .
--- தினமலர் . பெண்கள் மலர் . மார்ச் . 1 . 2008 .
No comments:
Post a Comment