Thursday, August 27, 2009

ஐஸ்கட்டி கதை !

ஐரோப்பிய நாட்டிலே ' பிரடெரிக் தி கிரேட்' என்ற மன்னன் , " ஏழைகளுக்கு எவ்வளவோ செய்கிறேன் . ஆனால் , எதுவும் கிடைக்கவில்லை , கிடைக்கவில்லை என்று குறை கூறுகின்றார்களே , ஏன் ?"
என்று , ஒரு பெரிய விருந்தின்போது தனது பிரபுக்களையும் , அமைச்சர்களையும் பார்த்துக் கேட்டான் .
வயது முதிர்ந்த அமைச்சர் ஒருவர் , " நான் இதற்குப் பதில் சொல்கிறேன் " என்று சொல்லி விட்டு , விருந்தில் தனக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு ஐஸ்கட்டியை எடுத்துப் பக்கத்திலிருந்தவரிடம் கொடுத்து , ' இதை அடுத்த பிரபுவிடம் கொடு என்றார் . அவர் அவரிடத்தில் கொடுத்தார் . அந்தப் பிரபு தன் பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்தார் . இப்படி 50 , 60 கைகள் மாறி , கடைசியிலே மன்னர் கையில் போய்ச் சேரும்போது , இரண்டு சொட்டுத் தண்ணீர்தான் மிச்சம் இருந்தது . ' எங்கே ஐஸ்கட்டி ?" என்று கேட்டான் மன்னன் .
' உங்களுக்குக் கிடைத்த இரண்டு சொட்டுத் தண்ணீர்தாம் ! . அது ஐஸ்கட்டியாகத்தான் புறப்பட்டது . இத்தனை இடைத் தரகர்கள் வழியே வந்ததாலே , கடைசியில் உங்களுக்கு இரண்டு சொட்டுத் தண்ணீர்தான் கிடைத்தது . நீங்கள் ஏழைகளுக்குச் செய்யும் உதவிகளும் இப்படித்தான் ! " என்று விளக்கினார் அந்த அமைச்சர் .
--- C . N . அண்ணாதுரை சொன்ன ஐஸ்கட்டி கதை . ஆனந்தவிகடன் , 10 - 10 - 1965 .

No comments: