Friday, November 13, 2009

தனி விமான சேவை !

செல்லப் பிராணிகள் பயணம் செய்வதற்காக தனி விமான சேவை அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது .
வளர்ப்பு பிராணிகளை பலர் செல்லமாக வளர்த்து வருகின்றனர் . நாய் , பூனை , குருவி போன்றவற்றை சிலர் குழந்தைகளுக்கு நிகராக பாவித்து வளர்த்து வருகின்றனர் . இவற்றை , ஒரு இடத்துக்கு சரக்கு விமானங்களில் மட்டுமே அழைத்துச் செல்லமுடியும் என்பதால் தேவையான வசதிகள் கிடைக்காமல் அல்லல்படுகின்றன . அமெரிக்காவில் செல்லங்களின் விமான பயண பிரச்னைக்கு இப்போது இதற்கு விடிவு ஏற்பட்டுள்ளது .
செல்லப் பிராணிகள் பயணம் செய்வதற்காக தனி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் . பெட் ஏர்வேஸ் எனப்படும் இந்த விமான சேவை அமெரிக்காவில் நியூயார்க் , வாஷிங்டன் , சிகாகோ , டென்வர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய 5 நகரங்களுக்கு இடையே இப்போது இயக்கப்படும் . இந்த விமானத்தில் செல்லப் பிராணி ஒன்று பயணம் செய்ய கட்டணம் 149 டாலர் ( ரூ .12,450 ) மட்டுமே .
விமான பயணத்தில் பிராணிகள் பராமரிப்பு , தட்பவெப்ப கட்டுப்பாட்டு அறை வசதிகள் இலவசமாக வழங்கப்படும் . ஒவ்வொரு விமானத்திலும் விமானி , துணை விமானி , ஆகியோருடன் பிராணிகள் உதவியாளர்களும் இருப்பார்கள் . விமானத்தில் இருக்கும் பிராணிகள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படும் . நீண்ட தொலைவு விமானங்கள் ' பாத்ரூம் பிரேக் ' வசதிக்காக நிறுத்தப்படும் . அங்கு உணவு வழங்கப்படும் .
---- தினமலர் 18 - 07 - 2009 .

No comments: