வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் .
வாகனத்தை ஓட்டுபவருக்கும் , சாலையில் செல்பவருக்கும் விபத்தின்போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை ஈடு செய்வதற்காகத்தான் இன்ஷூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது . இன்ஷூரன்ஸ் இல்லையென்றால் இழப்பீடும் பெறமுடியாது . இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை சாலையில் ஓட்டுவது சட்டப்படி குற்றம் .
இருசக்கர வாகனத்திற்கான இன்ஷூரன்ஸ் தொகையை நிர்ணயிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன . புதிய வண்டியென்றால் வாகன விலையில் ஐந்து சதவீதம் மட்டும் குறைத்து நிர்ணயிக்கப்படும் . உதாரணத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் என்றால் ரூ. 47, 500 க்கு இன்ஷூர் செய்யலாம் . அதுவே 6 மாதம் முதல் ஒரு வருடம் ஆன வாகனத்திற்கு 15 % குறைத்துக்கொள்ள வேண்டும் . ஒன்று முதல் இரண்டு வருடம் ஆன வாகனங்களுக்கு அதன் மதிப்பில் இருபது சதவிகிதமும் , இரண்டு முதல் மூன்று வருடம் ஆன வாகனத்திற்கு முப்பது சதவிகிதமும் , மூன்று முதல் நான்கு வருடம் ஆன வாகனத்திற்கு நாற்பது சதவிகிதமும் , ஐந்து வருடம் ஆன வாகனத்திற்கு ஐம்பது சதவிகிதம் குறைத்துக்கொண்டு கட்டவேண்டும் . ஐந்து வருடத்திற்கு மேல் 12 வருடம் ஆன வாகனத்திற்கு வண்டியின் கண்டிஷனைப் பொருத்து நாம் விரும்பும் தொகைக்கு இன்ஷூரன்ஸ் செய்யலாம் .
--- இளையரவி, ( தகவல் தமயந்தி ) குமுதம் . 22 - 07 - 2009 .
No comments:
Post a Comment