Saturday, June 19, 2010

உலக அதிசயம் -- யானைமலை .

உருவாகிறது ஒரு உலக அதிசயம் .
யானைமலையை குடைந்து கலைநகரம் . ஆய்வுக்குழு அமைத்து அரசு உத்தரவு.
மதுரை அருகே ஒத்தக்கடையில் இருக்கிறது யானைமலை . நகரில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருக்கும் தோற்றம் தெரியும் . 4 ஆயிரம் மீட்டர் நீளத்தில் ஆயிரத்து 200 மீட்டர் அகலத்தில் 400 மீட்டர் உயரத்தில் இருக்கிற இம்மலையை ' உலகின் மிகப்பெரிய கல் ' என்கின்றனர் . மலை வடிவமாக இருக்கும் இந்த ஒற்றைக் கல் பாறையை கலை வடிவமாக மாற்றி உலக அதிசயங்களில் ஒன்றாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒற்றைக் கல் பாறை யானை வடிவில் படுத்திருப்பது நலமல்ல .எனவே யானை நடையிடும் 900 அடி உயர புடைப்புச் சிற்பம் செதுக்கப்படும் . இதன் முன்புறம் 27 அடி இடைவெளிவிட்டு 400 அடி அகல , 864 அடி உயரத்தில் தஞ்சை கோபுரத்தை விட பெரிய கோபுரம் செதுக்கப்படும் . நூறடி அகல , 216 அடி உயரம் கொண்டதே தஞ்சை கோபுரம் .
ஓரங்கள் குடைந்து மிகப் பெரிய கூடங்கள் , சர்வ மத குடைவரை ஆலயங்கள் அமைப்பது , சங்கத்தமிழ் இலக்கியத்தை , திருக்குறளை ஓவிய, சிற்பங்களாய் செய்வது , மனித வரலாற்றை , புராணங்களை , இதிகாசங்களை, வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை என்றென்றும் அழியாத காட்சிப் படிமமாய் மாற்றி வைப்பது என மேலும் பத்தாண்டுகளில் பணிகளை நிறைவு செய்யலாம் .
இம்மலையில் உள்ள நரசிம்ம பெருமாள் ஆலயம் , சமணப்ப்டுகைகள் என எந்த பழமைச் சின்னங்களும் சேதப்படாமல் , புதியவைகளை உருவாக்கி உலக அதிசயங்களில் ஒன்றாக இந்த யானைமலையை மாற்ற சிற்பக் கலைநகராக மாற்ற முடியும் . மலை குடையும்போது கிடைக்கும் கிரானைட் கற்கள் , கற் பலகைகள் , மணல் விற்றால் ரூ. 5,000 கோடி கிடைக்கும் . திட்டச் செலவு ரூ. 1, 500 கோடிதான் . இவ்வாறு , கடினப்பாறையினால் ஆன இம்மலையைக் குடைந்து சிற்பக்கலை நகரம் அமைக்க மாமல்லபுரம் சிற்பக்கல்லூரி முன்னாள் ஆசிரியரும் , பெருந்தச்சர் அவையம் நிறுவனரும், வக்கீலுமான தஞ்சாவூரைச் சேர்ந்த் அரசு ( 63 ) தெரிவித்தார் .
--- செ. அபுதாகிர் . தினகரன் 2 பிப்ரவரி 2010 .

6 comments:

kuthu said...

தொடர்ந்து படிக்கிறேன்.. தினமும் தகவல்களைத் தாருங்கள்..

மதார் said...

அட அந்த மலை பேரு யானை மலையா ? முதல்முறை பார்த்தபொழுது அதிசயமாய் இருந்தது . இவ்வளவு பெரிய மலையா என்று .

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வுங்க.

நான் சிவகங்கைதான். தற்சமயம் பிழைப்பிற்காக சவுதி வாசம். மேலூர் மார்க்கமாக மதுரை பயணப் படும்போதெல்லாம் பார்த்து வியந்த மலை. சந்தோசமாக இருக்கிறது..

க. சந்தானம் said...

Dear kuthu , தொடர்ந்து படிக்கிறேன் என்கிறீர்கள். மிக்க நன்றி !

க. சந்தானம் said...

ப. ராஜாராம் அவர்களே, அருமையான பகிர்வு என்றீர்கள் . மிக்க நன்றி!

க. சந்தானம் said...

அன்பு மதார் அவர்களுக்கு , மிக்க நன்றி !