பூக்களில் தேன் இருப்பதில்லை ! அவற்றில் ' நெக்டார் ' என்ற இனிப்பு திரவம் மட்டுமே சுரக்கும் . அது, சுக்ரோஸும் தண்ணீரும் கலந்த கலவை . இதை உறிஞ்சி தேனீக்கள் தங்கள் வயிற்றில் சேமிக்கும் .
தேனீக்களுக்குள் சுரக்கும் ஒரு என்சைமும் நெக்டரும் இணையும் போதுதான், ப்ரக்ட்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் தண்ணீர் கொண்ட தேன் திரவம் உருவாகிறது . இதை தேன்கூட்டில் தேனீக்கள் உமிழும் . பிறகு அதில் உள்ள தண்ணீரை நீக்க தங்கள் சிறகுகளால் வேகமாக விசிறும் . தண்ணீர் நீங்குவதால், தேன் கெட்டியாகும் . தேனில் 80 சதவிகிதம் ப்ரக்ட்ரோஸ், குளுக்கோஸ் ; 18 சதவீதம் தண்ணீர் ; 2 சதவீதம் வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன . ப்ரக்ட்ரோஸ், குளுகோஸ் அதிகமாக இருப்பதால்தான் சர்க்கரையை விட தேன் இனிப்பாக இருக்கிறது !
--- தினமலர் , இணைப்பு . மார்ச் , 26 , 2010.
4 comments:
தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் நன்றி
தகவலுக்கு நன்றி.
Velu . G. அவர்களுகு , தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் . நன்றி !
ஈழவன் அவர்களுகு , தகவல் பற்றி சொல்லியுள்ளீர்கள் . நன்றி !
Post a Comment