மிளகாயில் லிப்ஸ்டிக் விஞ்ஞானிகள் தகவல் .
ரசாயன பொருட்களை தவிர்த்து இயற்கை முறையில் லிப்ஸ்டிக் தயாரிக்க புதுவகை மிளகாய் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
இதுநாள் வரை ரசாயன பொருட்களை பயன்படுத்திதான் கம்பெனிகள் உதட்டு சாயத்தை தயாரித்து வருகின்றன . ஆனால் , இனிமேல் மிளகாயை பயன்படுத்தியும் உதட்டு சாயத்தை தயாரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் . இந்திய வேளாண் விஞ்ஞானிகள் உதட்டுச்சாயம் தயாரிக்க பயன்படும் புதுரக மிளகாயைக் கண்டுபித்துள்ளனர் . வாரணாசியைச் சேர்ந்த இந்திய காய்கறி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த 5 ஆண்டுகள் தீவிர ஆய்வுகள் நடத்தி புதிய ரக மிளகாய் ஒன்றை கண்டுபிடித்து , அதற்கு ஐ.வி.பி.சி 535 என்று பெயரும் வைத்துள்ளனர் .
பார்க்க செக்கச் சிவந்த பழம்போல் இருக்கும் இந்த மிளகாயில் காரம் சுத்தமாக இருக்காது . எனவே இதை சமையலுக்குப் பயன்படுத்த முடியாது . இந்த மிளகாய் சிவப்பு மட்டுமல்லாமல் , மஞ்சள் , ஆரஞ்சு , இளஞ்சிவப்பு என மேலும் பல வண்ணங்களிலும் உருவாக்கி உள்ளனர் அதுமட்டுமல்லாது கேக், ரசகுல்லா போன்றவற்றை தயாரிக்க உதவும் கேசரிப்பவுடருக்கு பதிலாகவும் , இந்த மிளகாயைப் பயன்படுத்தி இயற்கை சாயத்தை உருவாக்க முடியும் .
--- - தினமலர் .18 / 9 /10 .
2 comments:
புதிய தகவல் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
மதுரை சரவணன் அவர்களுக்கு , நன்றி !
Post a Comment