ராணுவம் தந்த டப்பா உனவு.
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் தகரக்குவளைகளில் உணவை அடைத்துப் பதப்படுத்தும் முறை கண்டறியப்பட்டது. மாவீரன் நெப்போலியனின் ராணுவத்தினர் போரில் சண்டையிட்டு இறந்ததைவிட, பசி, ஊட்டக்சத்து குறைபாட்டால் அதிக அளவில் இறந்தனர். வைட்டமின் சி குறைபாட்டால் ஸ்க்ர்வி நோய் தாக்கியதால் பாதிக்கப்பட்டனர். புண்கள் ஏற்படுதல், மஞ்சள்காமாலை காய்ச்சல், நரம்புக் கோளாறு, இறப்பு போன்றவற்றை அது ஏற்படுத்தக்கூடும்.
அப்போது ஃபிரெஞ்சு அரசாங்கம், ராணுவ வீரர்களுக்காக உணவைப் பதப்படுத்தும் முறையை கண்டறிபவர்களுக்கு 12,000 பிராங்க் பரிசாக அளிப்பதாக அறிவித்தது. நிக்கோலஸ் அப்பேர்ட் என்பவர், பாதி சமைக்கப்பட்ட உணவை இதற்குத் தீர்வாகப் பயன்படுதலாம் என்று தெரிவித்தார். அவர் ஒரு பார்சி. உணவை பாட்டில்களில் சேமித்து, அவற்றை கார்க்கால் அடைத்து அவற்றின் உள்ளே உள்ள காற்றை வெளியேற்ற கொதிக்கும் தண்ணீரில் போட்டார். ஏனென்றால், காற்றுதான் உணவைக் கெட்டுப் போகச் செய்கிறது என்று அவர் நம்பினார். ஃபிரெஞ்சு ராணுவ வீரர்கள் வெளிநாட்டுக்குப் போனபோது, அப்பேர்ட் பதப்படுத்திய கோழி, காய்கறி, குழம்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். நான்கு மாதங்களுக்குப் பிறகும்கூட சாப்பிடக்கூடியதாக அவை இருந்தன என்று தெரிவித்தனர். இப்படியாக உணவைப் பதப்படுத்தம் செயல்பாடு, ரணுவத் தேவைகளுக்காகவே முதலில் கண்டறியப்பட்டத்து.
ஆனால், கொதிக்கும் தண்ணீரில் உள்ள வெப்பம் காற்றை நீக்குவதற்கு பதிலாக நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது என்பதை அரை நூற்றாண்டுக்குப் பிறகே லூயி பாஸ்டர் கண்டுபிடித்தார், நுண்ணுயிரிகளே உணவைக் கெட்டுப் போக வைத்தன, நோயகளை உருவாக்குகின்றன என்று அவர் கண்டுபிடித்தார்.
உணவைப் பதப்படுத்துவது என்பது பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுப்ப்பதுதான். அத்துடன் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அடைவதால் சிக்குப் பிடித்துப் போவதைத் தடுப்பதும் ஆகும். உணவுப் பதப்படுத்தும் நுட்பம் மூலம் சுவையான பல புதிய உணவுப் பொருள்களும் கண்டறீயப்பட்டுள்ளன. தயிர், சீஸ் போன்ரவை எடுத்துக்காட்டு.
-- ஆதி வள்ளியப்பன் . வெற்றிக்கொடி. அறிவு உயர்வு தரும். சிறப்புப் பகுதி .
-- ' தி இந்து ' நாளிதழ். திங்கள், நவம்பர் 18, 2013.

No comments:
Post a Comment