கிரீன் டீ என்பது ஒருவகைத் தேனீர்தான். பொதுவாக தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் ஆக்சிடைசாக அனுமதிக்கப்படுகின்றன. ( ஒரு துண்டு ஆப்பிளை காற்றுபடும் இடத்தில் வைத்தால், அது பழுப்பாக மாறத் தொடங்கும். அதன் சுவையும், அதிக இனிப்பாக இருக்கும். ஆக்சிஜனால் உண்டாகும் மாற்றம் இது). இது போன்ற மாற்றம்தான் தேயிலைக்கு நிகழ்கிறது. ஆனால், கிரீன் தேயிலைகள் பறிக்கப்பட்டவுடன் வெப்பப்படுத்தப்படுகின்றன. இதனால் அவை ஆக்சிஜனோடு எந்த வினையும் பிரிவதில்லை. இதனால்தான், கிரீன் டீயின் சுவையும் ( அதில் விட்டமின் சத்துக்கள் நிறைய இருந்தும் ) வித்தியாசமாக, கொஞ்சம் துவர்ப்பாக இருக்கிறது.
-- - ஜி.எஸ்.எஸ். , குட்டீஸ் சந்தேக மேடை?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 29, 2013.
-- - ஜி.எஸ்.எஸ். , குட்டீஸ் சந்தேக மேடை?!
-- தினமலர். சிறுவர்மலர். நவம்பர் 29, 2013.
No comments:
Post a Comment