Friday, December 27, 2013

வானவில்.

   வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை.  பனிமூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத சின்னச் சின்ன தூசு, காற்றில் நிறந்திருக்கும் நீர்த்துளிகள் ஆகியவற்றுக்கும் வானவில் தோன்றுவதில் பங்கு இருக்கிறது.  நம் கண்களுக்குத் தெரிவதுபோல உண்மையில் வானவில் அரைவட்டமாக இருக்காது.  முழுவட்ட வடிவில்தான் வானவில் தோன்றும்.  நம் கண்களுக்கு வளிமண்டலத்தின் மேற்பகுதியில் இருக்கும் அரை வட்டம் மட்டுமே தெரியும்.  உண்மையில் நம் கையால் தொடமுடிகிற அளவுக்கு வானவில்,  ஒரு பொருள் அல்ல.  கானல் நீர் போல ஒளிச்சிதரல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம் கண்களுக்குத் தெரிகிற ஒரு பொம்பம் மட்டுமே.
     வானத்தில் உள்ள நீர்த்துளிகளில் ( அதுதான் மழையாகப் பொழிகிறது) சூரிய ஒளி ஊடுருவி, அது சிதலமடைந்து, நீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதால் உருவாகும் நிகழ்வே வானவில்.  ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே வானவில் நம் கண்கலுக்குத் தெரியும்.
    வானவில்லில் நீலம், கருநீலம், ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்கள் இருக்கும்.  ஆங்கிலத்தில் VIBGYOR என்ற வார்த்தையின் மூலம் இந்த வண்ணங்கலை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.  அதாவது ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒவ்வொரு நிறத்தின் முதல் எழுத்தைக் குறிக்கும். v - violet,  i - indigo,  b - blue,  g - green,  y - yellow,  o - orange,  r - red.
     வானவில்லில் இரண்டு வகை உண்டு.  முதன்மை வானவில்லில் வெளிப்பக்கம் சிவப்பு நிறமும், உள்பக்கம் ஊதா நிறமும் இருக்கும்.  இரண்டாம் நிலை வானவில்லில் ( அதாவது நீர்த்துளிகளுக்குள் சூரிய ஒளி இரண்டுமுறை சிதறடிக்கப்படும்போது தோன்றுவது )  இந்த வண்ண அமைப்பு அப்படியே தலைகீழாக இருக்கும்.
-- பிருந்தா  மாயாபஜார். சிறப்புப்பகுதி.
-- ' தி இந்து ' நாளிதழ். புதன் 13, 2013. 

No comments: