உங்களோடு பேசியபடியே நடந்துவரும் நண்பர் திடீரென்று கீழே விழுந்துவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன நினைப்பீர்கள்...? காலையில் சாப்பிடாமல் வெறும் வயிற்றோடு வந்திருக்கலாம், சர்க்கரை அளவு குறைந்திருக்கலாம், ரத்த அழுதம் கூடியோ, குறைந்தோ இருக்கலாம் என்று கணிப்பீர்கள் தானே. இனி இந்தப் பட்டியலில் பக்கவாதத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சரி, அப்படி விழுந்தவர் பக்கவாதம் பாதிப்பில்தான் விழுந்தார் என்று எப்படி அறிந்துகோள்வது? எஸ்டிஆர் செய்து பாருங்கள் என்கின்றனர் டாக்டர்கள். அதென்ன எஸ்டிஆர்...?
எஸ் ( ஸ்மைல் ): சம்பந்தப்பட்டவரை ' சிரிக்க' சொல்ல வேண்டும்.
டி ( டாக் ): அவரை ஓரிரு வார்த்தைகள் பேசச் சொல்ல வேண்டும்.
ஆர் ( ரைஸ் ) : இரண்டு கைகளையும் சேர்த்து மேலே தூக்கச் சொல்ல வேண்டும்
இந்த மூன்று செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்ய அந்த நண்பர் சிரமப்பட்டாலும், உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். அந்த அறிகுறிகள் தவிர, அவர் நாக்கை வெளியே நீட்டச் சொல்லுங்கள். நாக்கு கோணலாக வந்தாலும் பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து உடனடியாக செயல்படுங்கள்.
--- தினமலர். பெண்கள்மலர். 3. 8. 2013.

No comments:
Post a Comment