* பெய்ஜிங்
பூமியை விட சுமார் 1,200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் இருப்பதை சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு SDSS J0100 +2802 என்று பெயரிட்டுள்ளனர்.
கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந்துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களைவெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் 'குவாசார்' என்று அழைக்கப்படுகின்றன.
இந்த கருந்துளை பூமியில் இருந்து 1,200 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இப்படி ஒரு கருந்துளை இருப்பதை அமெரிக்காவும், சிலி நாடும் உறுதி செய்துள்ளன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகவும் பெரியதாகவும், இதன் ஒளிக்கதிர்கள் அதீத வெளிச்சம் கொண்டதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
"பிரபஞ்சத்தில் பெருவெடிப்பு நிகழ்ந்தது சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருந்துளையை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இதன் மூலம் கருந்துளைகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது குறித்தஆய்வு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது" என்றனர் ஆய்வாளர்கள்.
"பொதுவாக இது போன்ற ஒரு கருந்துளையைக் கண்டுபிடிக்க 10 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கிகள்தான் பயன்படுத்தப்படும். ஆனால் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலைநோக்கியைப் பயன்படுத்தி இவர்கள் கண்டுபிடித்திருப்பது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனைதான். இது சீன விண்வெளி விஞ்ஞானிகளின் அறிவுத்திறனைக் காட்டுகிறது" என்றார் ஆய்வாளர்.
-- பி.டி.ஐ. ( கடைசிப் பக்கம் ).
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, பிப்ரவரி 27, 2015.

No comments:
Post a Comment