Saturday, January 16, 2016

வார்த்தைகள் போதாது!

  சீன அறிஞர் கொன்பூசியஸ்கூட பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே 'எல்லா வார்த்தைகளும் சேர்ந்தாலும் சரியான உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாது' என்று சொல்லியிருக்கிறார்.  ஒன்றை விவரிப்பதற்கு ஒரு மொழியில் மட்டும் உள்ள வார்த்தைகள் போதாது.  குறைந்தது 10 மொழிகளாவது தெரிந்திருக்கவேண்டும்.  'சாந்தி முகூர்த்தம்' என்ற பதத்துக்கு ஆங்கில வார்த்தை இல்லை.  'இடது கால் செருப்பு'க்கு மட்டும் ஆப்பிரிக்க மொழியில் ஒரு வார்த்தை உண்டு.  தமிழில் கிடையாது.  ஆகவே, பல மொழிகள் தெரிந்தால்தான் அது சாத்தியமாகும்.  செவ்விலக்கியத்தின் வரைவிலக்கணம் என்னவென்றால், அது எதைச் சொல்லப் புறப்பட்டதோ அதைச் சொல்லி முடிப்பதற்கு முன்னரே அது முடிந்துவிடும் என்பது.  பிரச்சனை என்னவென்றால், மனிதன் முதலில் சிந்தித்தான்.  பின்னர்தான் வார்த்தை பிறந்தது.  எப்போதும் சிந்தனை கொஞ்சம் முன்னுக்கும் வார்த்தை ஓரடி பின்னுக்கும் தான் இருக்கும்.
-- விகடன் மேடை.  வாசகர் கேள்விகள்... அ.முத்துலிங்கம் பதில்கள்.
-- ஆனந்த விகடன்.26-02-2014.  

No comments: