1. உலகில் சிரிக்கத் தெரிந்த உயிரினம், 'மனிதன்'.
2. மனிதன் சிரிக்கும்போது 17 தசைகள் இயங்குகின்றன. கோபமடையும்போது 43 தசைகள் இயங்குகின்றன.
3. மனித வாழ்வில் கண்கள் மூலமே 81 சதவீத தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. காது மூலம் 7.1 சதவீதம், தொடுவது,
சுவையறிதல் மூலம் 1.5 சதவீதம் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
4. ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்தில் 150 சொற்களை பேச முடியும்.
5. மனிதன் பேசுவதற்கு உடலில் உள்ள 72 தசைகள் வேலை செய்ய வேண்டும்.
6. மனித உடலில் உள்ள மிக மென்மையான உள் உறுப்பு 'மூளை'.
7. மனிதனின் கண்களால் 70 லட்சம் நிறங்களைப் பிரித்தறிய முடியும்.
8. தாயின் கருவில் முதலில் தோன்றும் உறுப்பு இதயம்.
9. மனித உடலில் மிகச் சிறிய எலும்பு உள்ள உறுப்பு காது.
10. மனிதன் ஓர் ஆண்டில், சராசரியாக 1400 கனவுகளைக் காண்கிறான்.
-- இரா.நாகராஜன். நம்ப முடிகிறதா? மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், மார்ச் 19, 2014.
No comments:
Post a Comment