ஓர் உயிரினத்தால் அதிகபட்சம் எத்தனை நாட்கள் சாப்பிடாமல் உயிர் வாழ முடியும்? 1,500 நாட்கள். அதாவது நான்கு வருடங்கள் தொடர்ந்து உயிர் வாழ்ந்துவருகிறது ஒரு ஜீவன். ஜப்பானின் கடல்வாழ் உயிரினக் காப்பகத்தில் உள்ள ஐசோபோட் என்ற கடல் வாழ் உயிரினம்தான் அது. கடந்த 2007-ம் வருடம் மெக்சிகோ கடல் பகுதியில் அகப்பட்ட ஐசோபோட் , இந்தக் காப்பகத்துக்கு வந்த அன்று மேக்கரல் என்னும் மீனை ஐந்தே நிமிடங்களில் தின்று தீர்த்தது. ஆனால், அதன் பிறகு இதுவரை எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறது ஐசோபோட். சாதாரணமாக, நாள் ஒன்றுக்குத் தனது எடைக்கு நிகரான உணவை உட்கொள்ளும் வழக்கமான ஐசோபோட் நான்கு ஆண்டுகளாகச் சாப்பிடாமல் இருப்பதும், இன்றும் உயிரோடு இருப்பதும் ஆச்சர்யம் என்கிறார்கள் காப்பக ஊழியர்கள். - திரும்பக் கொண்டுபோய் கடல்ல விடுங்கப்பா!
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 06-03-2013.
-- இன்பாக்ஸ்.
-- ஆனந்த விகடன். 06-03-2013.
No comments:
Post a Comment