மனதிற்கு சத்வம், ரஜம், தமஸ் என்று மூன்றுவித குணங்கள். சத்வம் என்ற குணத்தினால் வித்தைகளை எளிதில் அறியும் ஆற்றல், அறிந்த வித்தைகளை மறக்காமல் இருக்கும் சாமர்த்தியம் முதலிய சக்திகள் மனதிற்கு ஏற்படுகின்றன. மனதின் இந்த விசேஷ சக்தியைத் தான் மேதை என்பர். மேதை எவ்வளவுக்கு எவ்வளவு நன்றாக மேன்மையடைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்த மனிதன் மேலாகிறான். ஆயுர்வேதமும் தர்ம சாஸ்திரமும் மனிதனுடைய மூளை சக்தியின் வளர்ச்சிக்குப் பிறந்த நிமிடம் முதல் பல உபாயங்களை கடைபிடிக்க வற்புறுத்துகின்றன. மூளையின் நாடிகள், தாதுக்கள் விரிவைத் துவங்கும் முன்பு தூய்மையான விரிவையே பெறுவதற்கு உதவும்படியாக குழந்தைக்குப் பிறந்தது முதலிலேயே உணவு மருந்து மூலிகை குளியல், மந்திரப் பிரயோகங்களை உபயோகிக்க சாஸ்திரங்கள் போதித்துள்ளன. இதற்கு மேதா ஜனனம் என்று சொல்லுவர்.
தாமிரக் கலப்பில்லாத சொக்கத் தங்கத்தின் ஒரு சிறு துண்டை தர்பத்தினால் முடிந்து கொண்டு, சுமார் 10-12 துளி சுத்தப்பசு நெய்யும் 5-6 துளி தேனும் கலந்து ஒரு தங்கம் அல்லது வெள்ளிப் பாலடையில் வைத்து அதில் தங்கத் துண்டை நன்றாய் அழுத்தி உரைத்து குழந்தையின் வாயில் அந்த நெய் தேன் கலவையை மெதுவாய் தடவி உட்கொள்ளச் செய்ய வேண்டும். ஒரு நாளில் மூன்று தடவை இதுபோல தொடர்ந்து செய்யலாம்.
-- எஸ்.சுவாமிநாதன். டீன். ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி. நசரத்பேட்டை-( பூந்தமல்லி அருகே)
-- தினமணி கதிர். 17-5-2015.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.

No comments:
Post a Comment