ஆள்காட்டிப் பறவையில் செம்மூக்கு ஆள்காட்டி ( Red - wattled lapwing ) என்றொரு வகை இருக்கிறது. இந்தப் பறவையை வேலூரை ஒட்டிய பகுதிகளில் 'தித்தித்தூ குருவி' என்று அழைப்பார்கள். வயல் வெளிகளிலும் திரிந்துகொண்டிருக்கும் இந்தப் பறவை ஆளரவம் கேட்டாலோ, ஆபத்து நேரிடுவதுபோல் தோன்றினாலோ 'தித்தித்தூ...தித்தித்தூ' என்று அலறியபடி அங்கு மிங்கும் பறந்துகொண்டிருக்கும். அந்தப் பறவையின் ஒலியை ஆங்கிலத்தில் 'டிட் ஹி டூ இட்' ( Did- he- do- it? ) 'அவனா செய்தான்?' என்று பொருள் வரும்படி ஒலிபெயர்ப்பு செய்வார்கள். அதனாலேயே அந்தப் பறவைக்கு ஆங்கிலத்தில் 'டிட்-ஹி-டூ-இட் பேர்ட்' என்ற பெயர் உண்டு. அதைப் போன்றே தமிழிலும் ஒரு பெயர் இருக்கிறது என்று அறிந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி!.
-- ஆசைத்தம்பி. ( அறிவோம் நம் மொழியை ).
-- கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 13, 2014.
No comments:
Post a Comment