Monday, November 21, 2016

ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த வேளையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி, 44 ஆண்டுகளுக்கு முன், 1970ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி சென்னையில் 'நேரு கண்ட ஜனநாயகம்' என்ற தலைப்பில் இயற்றிப் படித்த கவிதை.
கவிஞர்கள் எஸ்.டி.சோமசுந்திரம், கொத்தமங்கலம் சுப்பு, முருகு சுந்தரம், அப்துல்ரகுமான், கண்ணதாசன் ஆகியோர் கலந்துகொண்ட கவியரங்கில் தலைமை வகித்த படித்த கவிதை வரிகளில் இருந்து ...
'புன்னை மரம் நிழல் விரிக்கத் - தமிழ்
அன்னை மடி சுகம் அளிக்க
சென்னை நகர் ஒளி தெளிக்க
முன்னை இருள் விலகுவதற்கு
முயல்கின்ற தமிழ் அரசு
முதுபெரியோன் காந்தியாரின்
மூத்த பிள்ளை நேருவுக்கு
முதமிழால் கவி தொடுக்கும்.
பணமலைக்கிடையே பிறந்தார்
எனினும் ஏழையை அணைக்கும்
குணமலையாய் திகழ்ந்தார் என்போம்!
நீதிக்கு எதிரானவற்றையெல்லாம்
நேர் நின்று எதிர்த்ததாலே நேருவானார். இந்திய
நீள் எல்லைக்கோடு தன்னைப் பெரும்பகைவர்
கடந்த போது என்ன
நேருமோ என்றெங்கி இருந்த மக்கள் நெஞ்சின்
துயர் துடைத்து, எதுவும்
நேராது நான் இருக்கின்றேன் எனச் சொல்லி
நேருவானார்.
கண்ணிய அரசியலைப் போற்றிடும் நாட்டில்
கண் நிகர் நேருவைப் புகழ்வோம் பாட்டில்!
-- தினமலர். 16-11-2014.

No comments: