Tuesday, November 15, 2016

பஞ்சபூதங்கள்.

மேற்கத்திய மரபில் ஐம்பூதங்கள் கிடையாது. ஆகாயம் நீங்கலாக, அங்கே நான்கு பூதங்கள்தான் ( எலிமன்ட்ஸ் - elements ). ஆகாயம் என்று அழைக்கப்படும் வெளியையும் ஒரு அடிப்படை இயற்கைப் பொருளாக வைத்திருப்பது இந்திய மரபின் சிறப்பு. பிரபஞ்சம் முதல் நம் உடல் வரை ஐம்பூதங்களின் சேர்க்கைதான் என்று இங்கே நம்பப்படுகிறது. பௌதிகம் என்ற சொல்லுக்கு ஐம்பூதங்களால் ஆனது என்பது பொருள். உயிரற்ற நமது உடலை பூதவுடல் என்று மரியாதையாகச் சொல்வதை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். அதேபோல், பஞ்சதம் என்ற ஒரு சொல் மரணத்தைக் குறிக்க முன்பு பயன்பட்டிருக்கிறது. பஞ்ச பூதங்களும் பிரிந்து தனிதனியாவதால் மரணம் ஏற்படும் என்பது இதன் அடிப்படைப் பொருள். பஞ்சபூதங்களின் சேர்க்கை இயற்கையாக நடைபெற்றதேயொழிய கடவுளின் முயற்சியால் அல்ல என்று நம்பும் உலகாயதவாதத் தத்துவம்தான் பூதவாதம்.
-- ஆசைத்தம்பி. ( அறிவோம் நம் மொழியை ).
-- கருத்துப் பேழை.
-- 'தி இந்து' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 13, 2014.

No comments: