அவன் ஓர் ஏழைச் சிறுவன் . அவனுடைய தந்தை பஸ் ஸ்டாப் ஓரமாக நடைபாதயில் பஜ்ஜி சுட்டு விற்பவர் . வறுமை காரணமாக வேலை தேடி அந்தச் சிறுவன் லாகூருக்குப் போகிறான் . வேலை கிடைக்கவில்லை . பிறகு ராவல்பிண்டி . அங்கேயும் வேலை கிடைக்கவில்லை . பசிக் கொடுமை காரணமாக , சகா ஒருவனுடன் சேர்ந்து ' வீடுகளில் புகுந்து திருடலாம் ' என்று முடிவு செய்கிறான் . அதற்கு ஆயுதம் தேவை . ராவல்பிண்டியில் ராஜா பஜாரில் எதுவும் கிடைக்கும் . துப்பாக்கிகள் கூட . தற்செயலாக , மறைவாக இருந்த ஆயுதக் கடைக்குள் இருவரும் நுழைய அது லஸ்கர் - இ - தொய்பா பயங்கர இயக்கத்தின் கடை . துப்பாக்கி கிடைக்கிறது . திரும்பும்போது கடைக்காரன் ' தம்பிகளா ! துப்பாக்கி சுடத் தெரியுமா ?' என்கிறான் . தெரியாது என்றவுடன் ' உள்ளே வாருங்கள் ' என்று அழைக்கிறான் அவன் . இளைஞர்களுக்கு துப்பாக்கிப் பயிற்சியும் , பணமும் கிடைக்கிறது . கூடவே மூளைச் சலவையும் . இப்போது அந்த இளஞன் ஏ. கே .47 . போன்ற துப்பாக்கிகளை சர்வ அலட்சியமாகக் கையாளக் கூடிய ஒரு பயங்கரவாதி ! அவனுக்கு உதவியவர்களிடம் நன்றியுணர்வோடு ' எனக்கு ஏதாவது வேலை கொடுங்கள் !' என்கிறான் . ' நீங்கள் மும்பைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது !' என்று பதில் வருகிறது . மும்பை கொடூரத் தாக்குதலில் , உயிரோடு பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அந்த இளைஞன்தான் கஸாப் .
ஸோ , நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் தீவிரவாதிகள் உருவாகிறார்களா ... உருவாக்கப்படுகிறார்களா...எது சரி என்று !
--- ஹாய் மதன் . ஆனந்தவிகடன் , 13 - 05 - 2009
No comments:
Post a Comment