* துளசி இலையைச் சிறிது எடுத்து ஒரு மெல்லிய துணியில் சிறு மூட்டையாகக் கட்டி ஸ்டவ்விற்குள் போட்டு வைத்தால் , மண்ணெண்ணெய் விரைவில் தீராது !
* கோடைக் காலத்தில் கோழி முட்டைகள் விரைவில் கெட்டு விடும் என்பதால் வேப்பிலைக்குள் முட்டைகளை போட்டு வைத்தால் அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் .
* நிறம் மங்கி டல்லடிக்கும் சப்பாத்தி குழவிகளை அதிக கனமில்லாத உப்புத்தாள் கொண்டு தேய்த்து தண்ணீரில் கழுவி வைத்தால் , புதிது போல் ஆகிவிடும் .
* மோதிரம் , மிஞ்சி போன்றவற்றைக் கழற்ற முடியவில்லையா ? சிறிது ஐஸ் கட்டியை விரல் மீது வைத்து பின் கழற்றினால் உடனே ஈஸியாக கழன்றுவிடும் .
* கண்ணாடி வளையல் நீண்டநாள் வர வேண்டுமானால் கைகளில் மாட்டுவதற்கு சற்று முன்பு சிறிது நீரில் கொதிக்க வைத்து பின் அணிந்தால் உடையாமல் பல நாட்கள்
உழைக்கும் !
* மீன் துண்டுகளை எண்ணெயில் வறுக்கும்போது , அசைவம் சாப்பிடாத அக்கம்பக்கத்தவர் இருந்தால் அவர்களுக்கு கஷ்டமாக இருக்கலாம் . இதைத் தவிர்க்க , மீன் பொறிக்கும் போது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள் . மீன் வாடை அடிக்காது .
* கற்பூரத்தை எவ்வளவு டைட்டான டப்பாவில் போட்டு வைத்தாலும் கூட சில நாட்கள் கழித்து கரைந்துவிடும் . கற்பூரம் கரையாமல் இருக்க , டப்பாவில் கொஞ்சம் அரிசியை போட்டு வைத்தால்
போதும் . கற்பூரம் கரையவே கரையாது .
* பிஸ்கட்டுகளை என்னதான் டைட்டான டப்பாக்களில் போட்டு வைத்தாலும் அது இரண்டு , மூன்று நாட்களில் நமுத்துப் போய்விடும் . இதைத் தடுக்க , பிஸ்கட் வைக்கும் டப்பாக்களில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி விட்டு பிறகு அழுத்தி மூடிவிட்டால் போதும் , ஒரு வாரம் கழித்து திறந்து பார்த்தால்கூட , பிஸ்கட் மொறுமொறுவென்று புத்தம் புதிதாய் இருக்கும் .
* சிக்கன் வாங்கி அதை கட் பண்ணும்போது வாடை அதிகமாக இருக்கும் . எனவே , வாடை குறைய வேண்டுமென்றால் , சிக்கன் மீது கொஞ்சம் மஞ்சள் தூளை தூவி விட்டு , பத்து நிமிடம் கழித்து கட் பண்ணினால் வாடை ஓரளவு குறைந்திருக்கும்
No comments:
Post a Comment