" சாமக்கோழி கூவுகிறது " " நடுச்சாமத்தில் வந்தார் " என்று சொல்லும் போது , சாமம் என்றால் இரவு என்றே பொருள் கொள்ளப்படுகிறது . ஆனால் , அவ்விதம் பொருள் கொள்வது அறியமையாகும்
காரணம் , சாமம் என்பது ஒரு கால அளவீடு . அது இரவு நேரத்திற்கு மட்டும் உரியது அன்று .
சாமம் என்பது பகலிலும் உண்டு . இரவிலும் உண்டு .
60 நொடி = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை .
71/2 நாழிகை = 1 சாமம் .
8 சாமம் = 1 நாள் .
7 நாள் = 1 வாரம் .
15 நாள் = 1 பக்கம் .
2 பக்கம் = 1 மாதம் .
6 மாதம் = 1 அயனம் .
2 அயனம் = 1 ஆண்டு .
இதுவே நம் மக்களின் கால அளவீடு ( கணக்கீடு ).
இதில் 8 சாமங்கள் கொண்டது 1 நாள் . அதாவது பகலில் 4 சாமம் , இரவில் 4 சாமம் . அதாவது ஒரு சாமம் என்பது 3 மணி நேரம் . எனவே , சாமம் என்பது வேளையைக் குறிப்பது என்பது தவறு .
ஒரு நாளைக்கு 60 நாழிகைகள் என்பது கணக்கு . 60 நாழிகைகளை 8 ஆல் வகுத்தால் 7 1/2 கிடைக்கும் .
7 1/2 நாழிகை ஒரு சாமம் . நான்கு சாமம் சேர்ந்தது ஒரு பகல் . அதேபோல் , நான்கு சாமம் சேர்ந்தது ஓர் இரவு . எனவே , சாமம் என்பது இரவு அல்ல .
--- மஞ்சை வசந்தன் . பாக்யா , மே 22 -- 28 ; 2009 .
No comments:
Post a Comment