Wednesday, September 2, 2009

எதையும் தாங்கும் இதயம் .

" எதையும் தாங்கும் இதயம் வேண்டும் " என்றக் கருத்தை முதன் முதலில் அண்ணா சொன்னதாக பலரும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் . அவ்வாறு சிலர் கூறவும் எழுதவும் செய்கின்றனர் . ஆனால் , இது சரியன்று . உண்மையில் இச்சொற்றொடரைக் கூறியவர் பகுத்தறிவுச் சிந்தனையாளரான லார்ட் பைரன் என்பவர் ஆவார் . இவர் பிரிட்டிஷ் அரசால் இங்கிலாந்திலிருந்து பிரான்சிற்கு நாடு கடத்தப்பட்டார் . புறப்படுவதற்கு முன் , " டோவர் " துறைமுகத்திலிருந்து படகில் சென்றபோது , இக்கருத்தைக் கூறுகிறார் .
" என்னை நேசிப்பார்க்கு ஒரு
பெருமூச்சு
என்னை வெறுப்பார்க்கு ஒரு புன் முறுவல்
என்ன வந்தாலும் சரியே
எதையும் தாங்கும் இதயம் உண்டு ".
-- என்று கூறிவிட்டு பிரான்சுக்கு விடைபெற்றார் . இச்சொற்றொடரை அண்ணா எடுத்து ஆண்டார் என்பதே சரியாகும் .
இதேபோல் ,
நாடு என்ன செய்தது
என்று கேட்காதே !
நீ நாட்டுக்கு என்ன
செய்தாய் ?
-- என்ற சொற்றொடர் கென்னடியால் சொல்லப்பட்டது என்று பலரும் சொல்கின்றனர் . ஆனால் , அது உண்மையல்ல .
இதைச் சொன்னவர் கவிஞர் கலீல் ஜிப்ரான் ஆவார் . " புரோக்கன் விங் " " தி பிராபட் " போன்ற புகழ்மிக்க நூல்களை எழுதியவர் இவர் . அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கென்னடி இதை எடுத்தாண்டார் என்பதே உண்மை !

No comments: