Friday, February 5, 2010

சக்தி பீடங்கள் .

சக்தி பீடங்கள் வரிசையில் முக்கியமான ஒன்று ஜனஸ்தல ( ஜனஸ்தானம் ) பீடம் ஆகும் . மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பஞ்சவடியில் இந்த பீடம் அமைந்துள்ளது . பத்ரகாளி கோயில் என்று இந்த பீடமழைக்கப்படுகிறது . இது அம்பிகையின் முகவாய் கட்டை விழுந்த இடமாகக் கருதப்படுகிறது . தேவியின் பெயர் ப்ராமரி . இறைவன் பெயர் ஸர்வஸித்தீசர் . கோல்கத்தா காளி போலவே இங்கு அம்பிகை , சிம்ம வாகனத்தில் 18 கைகளிலும் ஆயுதமேந்தி , மகிஷாசுரனை அழிக்க புறப்பட்ட கோலத்தில் மிகக் கோபமாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சந்நிதியின் ஒரு ஓரத்தில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கிறது . எப்படி வருகிறது ? என்பதை மட்டும் இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை .
ராமாயண காலத்திலிருந்தே நாசிக் , பஞ்சவடி ஆகிய பகுதிகள் சிறப்புப் பெற்றுள்ளது . வனவாசத்தின் போது கங்கைக் கரையிலிருந்து பஞ்சவடிக்குத்தான் ராமர் , சீதை , லட்சுமணன் ஆகியோரை குகன் அழைத்துச் செல்வதாக வால்மீகி ராமாயணம் குறுகிறது . ராமர் தங்கிருந்த இடங்களை பஞ்சவடியில் இன்றும் காணலாம் .
பஞ்சவடிக்கு மிக அருகில்தான் ஷீர்டி , பண்டரிபுரம் , திரியம்பகி ஆகிய புண்ணியத் தலங்கள் உள்ளன . பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனையும் , ஷீரடியில் சாயிநாதனையும் தரிசிப்பது வாழ்க்கையில் கிடைக்காத பாக்கியம் . மேலும் திரயம்பகியில் அருள்புரியும் திரியம்பகேஸ்வர லிங்கம் , நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று .மும்பையிலிருந்து 188 கிலோ மீட்டர் தூரத்தில் நாசிக் உள்ளது . நாசிக்கிலிருந்து ஒரு மணி நேரம் சென்றால் பஞ்சவடியில் உள்ள சக்தி பீடத்தை அடைந்துவிடலாம் . இக்கோயிலில் வட இந்திய முறைப்படிதான் பூஜைகள் நடக்கின்றன .
--- தினமலர் பெண்கள் மலர் . செப்டம்பர் 11 , 2004 .

No comments: