Tuesday, February 9, 2010

வேடிக்கை !

உங்கள் சினேகிதனை ஏதவது ஒரு புஸ்தகத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள் . அதில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துக்கொண்டு , அதில் முதல் ஒன்பது வரிகளுக்குள் ஒரு வரியை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள் . அந்த வரியில் முதல் ஒன்பது வார்த்தைகளுக்குள் ஒரு வார்த்தை எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள் . இப்பொழுது உங்கள் நண்பனை ஒரு காகிதமும் பென்சிலும் எடுத்துக்கொண்டு , இந்தக் கணக்கைப் போடச் சொல்லுங்கள் .
அவன் எந்தப் பக்கம் எடுத்துக் கொண்டானோ அந்தப் பக்கத்தின் எண்ணைப் பத்தால் பெருக்கவும் . அத்துடன் 25 - ஐக் கூட்டவும் . அதோடு , எந்த வரி எடுத்துக் கொண்டானோ அந்தவரியின் எண்ணையும் கூட்டிக்கொள்ளவும் . வந்ததொகையைப் பத்தால் பெருக்கி , அத்துடன் எந்த வார்த்தை எடுத்துக் கொண்டானோ , அந்த வார்த்தையின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ள வேண்டியது . கடைசியில் கிடைத்த விடையைச் சொன்னால் , அவன் எந்த வார்த்தையை எடுத்துக் கொண்டான் என்று நீங்கள் சொல்லிவிடலாம் .
உதாரணமாக , விடை 2124 வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் . இதிலிருந்து 250 ஐக் கழிக்க வேண்டும் . 1874 வருகிறதா ? இந்த விடையின் கடைசி எண்தான் ( அதாவது 4 ) வார்த்தையின் எண்ணிக்கை . அடுத்த எண் ( அதாவது 7 ) வரியின் எண்ணிக்கை . பாக்கி இருக்கும் 18 - தான் பக்க எண்ணிக்கை . ஆக , அவன் என்ன வார்த்தை எடுத்துக்கொண்டான் என்று சொல்லிவிடலாம்தானே ?
--- காலப்பெட்டகம் . 1938 . ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 .

No comments: