Friday, February 12, 2010

கலைஞர் !

கட்டடக் கலைஞர் !
உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் கிறிஸ்டோபர் ரென் . லண்டனில் ஒரு சர்ச் கட்டுவதற்கான பொறுப்பை அவரிடம் கொடுத்திருந்தனர் . அவரும் அதைச் சிறப்பாகக் கட்டினார் .
தூண்கள் இல்லாமலேயே உறுதியாக நிற்கும்படி வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த ஹால் . இந்தச் சாதனையைப் பொறுக்க முடியாத சிலர் , அதற்குத் தூண்களை அமைக்கச் சொல்லி வற்புறுத்தினர் .. நிர்வாகக் குழுவினரும் ரென்னிடம் தூண்களை அமைக்கச் சொல்லி வேண்டுகோள் வைக்கவே அங்கு இரண்டு தூண்களைக் கட்டினார் ரென் .
ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு அந்த சர்ச்சைப் புதுப்பிக்கும் பணி நடந்தது . அப்போதுதான் ஓர் அதிர்ச்சிகரமான காட்சியை அங்கிருந்தவர்கள் கண்டனர் . கடைசியாகக் கட்டப்பட்ட அந்த இரண்டு தூண்களும் மேல் தளத்துடன் இணைக்கப்படாமல் சிறு இடைவெளியில் தனியாக நின்றிருந்தது . மற்றவர்களின் திருப்திக்காக ரென் அந்தத் தூண்களைக் கட்டியிருந்தாரே தவிர , அந்தத் தூண்கள் கட்டடத்தைத் தாங்கவில்லை .
என்றாவது ஒருநாள் உரியவர்கள் , மக்கள் உண்மையை உணர்ந்து தன்னைப் பாராட்டுவார்கள் என்று ரென் நம்பினார் .
--- இளசை சுந்தரம் . இலக்கியப்பீடம் . அக்டோபர் 2009 . இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: