காச நோய்க்கு டி.பி., என 1839 ம் ஆண்டு பெயரிடப்பட்டது . காசநோயை ' மைகோபேக்டீரியம் , டியூபர்குலோசிஸ் ' என்ற பாக்டீரியா ஏற்படுத்துகிறது என்று 1882 ம் ஆண்டில் ராபர்ட் கோக் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார் . அவருக்கு 1905 ம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது . பின்னர் , 1906 ம் ஆண்டில் பி.சி.ஜி. எனப்படும் காசநோய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது . 1943 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ம் தேதி ' ஸ்ட் ரெப்டோமைசின் ' என்ற புதிய ஆன்டிபயாடிக் மருந்தை ஆல்பர்ட் ஸ்காட்ஸ் என்ற ஆராய்ச்சி மாணவர் கண்டுபிடித்தார் . எனினும் , அதை ஆராய்ச்சி கண்காணிப்பாளர் வாக்ஸ்மேன் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு , அவருக்கு 1952 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது . இதனால் வாக்ஸ்மேனுக்கு எதிராக ஸ்காட்ஸ் வழக்குத் தொடர்ந்தார் . இதன் பின்னர் , ஸ்ட்ரெப்டோமைசின் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக ஸ்காட்ஸ் அங்கீகரிக்கப்பட்டார் . இந்த புதிய மருந்து கண்டுபிடிப்பால் , காசநோயாளிகளுக்கு புது வாழ்க்கை கிடைத்தது
--- தினமலர் , 19 - 10 - 2009 .
No comments:
Post a Comment