8 கிலோ சேலை !
உலகின் காஸ்ட்லியான புடவை எங்கே இருக்கிறது ? சென்னை என்று சரியாக யூகித்திருந்தால் சபாஷ் !
2007 -ம் ஆண்டு சென்னை சில்க்ஸால் நெய்யப்பட்ட இந்தச் சேலையின் விலை 40 லட்சம் ரூபாய் . கின்னஸ் புத்தகத்திலும் இந்தச் சாதனை இடம்பெற்றுள்ளது . கிட்டத்தட்ட 7 மாதங்கள் சுமார் 4,680 மணி நேரங்கள் 30 நெசவாளர்களைக்கொண்டு நெய்யப்பட்ட இந்தப் புடவையைப் பல்லக்கில் வைத்துக் கடைக்குக் கொண்டுவந்தார்கள் .
இந்த அழகான சிவப்பு நிறப் புடவை முழுவதும் அசல் தங்க ஜரிகையால் நெய்யப்பட்டது . தவிர , பிளாட்டினம் , வெள்ளி , வைரம் , வைடூரியம் உள்ளிட்ட நவரத்தினங்களும் பதிக்கப்பட்டது .
புடவையின் முந்தானைப் பகுதியில் வரையப்பட்டுள்ள ரவிவர்மாவின் ' பெண் இசைக் கலைஞர்கள் ' ஓவியம் இந்தச் சேலைக்குக் கூடுதல் மெருகேற்றுகிறது . சேலையின் இரு பக்க பார்டர்களிலும் ரவிவர்மாவின் ஓவியங்களும் உண்டு . புடவையின் எடை 8 கிலோ !
--- ஸ்ம்ருதி . ஆனந்தவிகடன் . 14 - 10 - 2009 . இதழுடன் இணைப்பு .
No comments:
Post a Comment