Wednesday, February 10, 2010

ஆலயம் .

பசுபதிநாத் ஆலயம் .
மகாபாரதக் காலம் அது . பாண்டவர்கள் ஐவர் . நூறு கௌரவர்களையும் வீழ்த்திய நேரம் அது . போரில் வெற்றி பெற்றாலும் சொந்தக்காரர்களையே கொன்றதால் கோத்ர தோஷம் அவர்களைப் பிடித்தது . துன்புறுத்திற்று .
அதற்கு ஒரே வழி , சிவனின் தரிசனம்தான் என்று உணர்ந்து , பஞ்ச பாண்டவர்கள் கைலாயம் நோக்கி விரைந்தார்கள் .
உடனே அவர்களுக்குக் காட்சி தர விரும்பாத சிவபெருமான் கொஞ்சம் போக்குக் காட்டினார் . காளையாக உருமாறி ஓடி ஒளிந்தார் . அவர்களும் விடாமல் தொடர்ந்தார்கள் .
நேபாள் வந்து சேர்ந்தார் ஈசன் . அந்த மந்திர பூமி அவருக்கு மிகவும் பிடித்துப் போனது . அங்கேயே இருக்க முடிவு செய்தார் . இப்போது பசுபதிநாத் ஆலயம் இருக்குமிடத்தில் பூமிக்குள் காளை உருவில் புதைந்து கொண்டார் இறைவன் .
பாண்டவர்கள் விடவில்லை . விடாமல் தொடர்ந்தார்கள் . பூமிக்குள் ஒளிந்து போக்குக் காட்டிக் கொண்டிருப்பது தெரிந்து அவரை எப்படியும் தரிசனம் செய்துவிட வேண்டும் என்று விரும்பி , பயபக்தியுடன் அந்த இடத்தில் தோண்டி , வாலைப்பிடித்து வெளியில் இழுத்தார்கள் .
பூமிக்குள்ளிருந்து ஒரு புயலாக , விஸ்வரூபத்துடன் வெளிப்பட்டார் சிவபெருமான் .
அவருடைய முகம் , நெற்றி , கொம்பு வெளிப்பட்ட இடம்தான் பசுபதிநாத் . திமிள் வெளிப்பட்ட இடம் கேதார்நாத் முன்னங்கால் வெளிப்பட்ட இடம் துங்காநாத் . காளையின் ரோமங்கள் வெளிப்பட்ட இடம் கல்பநாத் . தொப்புள் வெளிவந்த இடம் மத்திய மகேஷ்வர் . இவ்வாறு ஏழு இடங்களில் அவை வெளிப்பட்டன . கடவுளிடம் ஒன்றக்கூடிய ஏழு இடங்கள் சக்தி மிக்க எனர்ஜி தரக்கூடிய ஏழு சக்கரங்கள் . கோவையில் உள்ள தியான லிங்கம் இதுபோல் ஏழு சக்கரங்களை வைத்து உருவாக்கப்பட்டதுதான் .
---ப்ரியா கல்யாணராமன் . குமுதம் , 14 - 10 - 2009 .

No comments: