* குழந்தைகளுக்கு, தங்கத்திலான தோடுகளை அணிவிக்கும்போது திருகாணியில், நகப்பூச்சு தடவி மாட்டினால் தோடு இருக்கமாக இருப்பதோடு, தொலைந்துவிடுமோ என்கிற டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் .
* விக்கலை நிறுத்த முடியவில்லையா ? ஒரு டீஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு அது கரையும் முன்பே விழுங்கவும் . மணலாகத் தொண்டைக்குள் இறங்கும் சர்க்கரை , அங்குள்ள நுண்ணிய நரம்பு முனைகளை வருடி, விக்கலுக்குக் காரணமான ஃப்ரீனிக் என்னும் நரம்பை அமைதிப் படுத்துவதால் விக்கல் விரைவில் நின்றுவிடும் .
* ஸ்கெட்ச் பேனா கறையைப் போக்குவதற்கு அசிடோன் ( நகப்பூச்சு அழிக்கும் திரவம் ) தடவினால் போதும் . கறை போய்விடும் .
* மழைக்காலத்தில், பீரோவுக்குள் இருக்கும் துணிகள் ஈரப்பதத்துடன் இருக்கும் . இதைத் தவிர்க்க, பத்து சாக்பீஸ்களை நூலில் கட்டி உள்பகுதியில் தொங்க் விடுங்கள் . இது பீரோவின் உள்ளே இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி துணிகளைக் காக்கும் .
* அதிக நேரம் உட்கார்ந்தால் கால் மரத்துப் போகிறதா ? கால் கட்டை விரலில் நான்கைந்து முறை விரல்களால் சுண்டி விடுங்கள் . சட்டென்று விறுவிறுப்புக் குறைந்து விடும் .
* சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிட்டிகை உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது .
* அரிசிமாவு, ரவை, மைதா 3 : 1 : 1/2 என்ற விகிதத்தில் இவற்றைக் கலந்து வார்த்தால் ரவா தோசை மொறுமொறுப்பாக இருக்கும் .
--- மங்கையர் மலர் , ஜனவரி 2011 . இதழ் உதவி : N கிரி , நியூஸ் ஏஜென்ட், திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .
No comments:
Post a Comment