Sunday, October 30, 2011

சூரியனின் பெருமைகள் !


பொன் வண்ணத்தேரில் மத்தியில் அமையும் பத்மாசனத்தில் இரண்டு மனைவியருடன், ஒளிமயமாக எழுந்தருளியிருப்பவன் சூரியன் .
சூரியதேவன் தேருக்கு ஏழு குதிரைகள் . காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஹ்ருக், அனுஷ்டுப், பங்தி என்னும் ஏழு வகையான சப்த வஸ்ஸுக்கள் ஏழு பச்சைக் குதிரைகளாக அவனது பொன்வண்ணத் தேரை அலங்க்கரிக்கின்றன .
பொதுவாக தேர் என்றால் இரண்டு சக்கரங்கள்தானே இருக்கும் . ஆனால், சூரியதேவன் தேருக்கோ ஒரேஒரு சக்கரம்தான் உண்டு . கருடனுக்கு ஒரு சகோதரன் உண்டு . அவன் பெயர் அருணன் . அவன்தான் சூரியனுடைய தேரை ஓட்டக்கூடிய சாரதி .
அதிகாலை சூரியன் ரிக்வேத சொரூபமாக இருக்கிறார் . உச்சி காலத்தில் யஜுர் சொரூபமாகிறான் . மாலை நேரத்தில் சாமவேத சொரூபமாக இருக்கிறான் என்கிறார்கள் .
இப்படி பல பெருமைகள் படைத்த சூரியதேவன் தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு மூர்த்தியின் பெயரால் வணங்கப்படுகிறார் . சித்திரை மாதத்தில் விஷ்ணுவாகவும், வைகாசி மாதத்தில் அரியமா என்றும் . ஆனியில் விவஸ்வான் என்றும், ஆடியில் அம்சுமான் என்றும், ஆவணியில் பிரசன்யன் என்றும், புரட்டாசியில் வருணன் என்றும், ஐப்பசியில் இந்திரன் என்றும், கார்த்திகையில் தாதா என்றும், மார்கழியில் விஸ்வான் என்றும், தையில் பூஷ்வா என்றும், மாசியில் பகன் என்றும், பங்குனியில் துவஷ்டா என்றும் பெயர் பெறுகிறார் .
பருவங்களுக்கு சூரியனே காரணம் . ஆண்டினை ஆறு பருவங்ககளாகப் பிரிப்பார்கள் . கார், கூதிர், முன்பனி, பின்பனி, வேனில், இளவேனில் என்பவை ஆறு பருவங்களாகும் . இரண்டு இரண்டு மாதங்களை ஒரு பருவமாக சொல்வார்கள் . பருவத்தை ' ருது ' என்று வடமொழியில் சொல்வார்கள் . வசந்த ருது, கிரீஷ்ம ருது, வர்ஷருது, சரத்ருது, ஹேமந்தருது சிசிரருது என்பன ருதுக்கள் . சூரியன் ஒவ்வொரு ருதுவிலும் ஒவ்வொரு வர்ணத்தில் இருப்பாராம் .
உதயகிரி எனப்படும் மலையில் தோன்றுகிறார் சூரியன் . அவர் தோன்றும் போது தென்திசையில் இலங்கை நோக்கி துயில்கொள்ளும் த்ருமாலின் காலை பார்த்துக்கொண்டே உதயமாகிறாராம் . எனவேதான் அவர் உதயமாகும் நேரத்துக்கு காலை என்று பெயர் வைத்தார்களாம் . அதுபோலவே மறையும் நேரத்தில் சூரியன் திருமாலின் முழு உருவத்தையும் தரிசிப்பதால் மாலை என்ற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்வார்கள் .
--- தினமலர் இனைப்பு . ஜனவரி 13 . 2011 .

No comments: