Thursday, October 27, 2011

வீடுகளுக்கு கதவில்லை !


வீடுகளுக்கு கதவில்லை, வங்கிக்கு பூட்டு கிடையாது !
மாகாராஷ்டிரம் மாநிலம் அகமது நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகான சிற்றூர் ஷானி சிங்னாப்பூர் . உலகப் புகழ் பெற்ற ஷானி கோயில் இங்கு உள்ளது . இதை சூரியன் கோயில் என்றும் சொல்கிறார்கள் . தங்கள் ஊரை கடவுளே காவல் காப்பதாக இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர் .
இதனால், இந்த ஊரில் எந்த வீட்டுக்கும் கதவு கிடையாது . எல்லா வீடுகளும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது . ஆனால் கதவு மட்டும் இல்லை . நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் . அவர்கள் தங்குவதற்கு அழகான குடில்கள் உள்ளன . அவற்றுக்கும் கதவு இல்லை . எந்த பொருளும் திருடு போனதில்லை . திருடுபவர்களை கடவுள் ஷானி தண்டித்துவிடுவார் என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர் .
இந்த கிராமத்தில் யூகோ வங்கி கிளை திறந்துள்ளது . வங்கியை பாதுகாப்பாக பூட்டி வைக்கவும் சேப்டி லாக்கர் அமைக்கவும் நிர்வாகம் முயன்றது . ஊர்மக்கள் ஒத்துக்கொள்ளவில்லை . அப்புறம் என்ன, பகலும் இரவும் வங்கி திறந்தே இருக்கிறது . இந்த வங்கியில் கலெக்ஷன் ஆகும் பணத்தை, விடுமுறை நாட்களில் மட்டுமாவது வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று அருகில் உள்ள வங்கிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது . எந்த வங்கியும் முன்வரவில்லை . இதனால் யூகோ வங்கியின் சேவை திறந்த பெட்டகமாகத்தான் இருக்கிறது .
--- தினமலர் 12 . 1. 2011 .
--- பின்குறிப்பு : நான் எங்கள் குடும்பத்துடன், அங்கு சென்று , ஒரு நாள் தங்கியபோது , அங்குள்ள விடுதிகளிலும் அறைகளிலும் இருக்கும் , குளியல் மற்றும் கழிவறைகளில் கூட கதவு இல்லை என்பதுதான் வேடிக்கை சுற்றுலாவில் சென்றதால் வேறு வழியின்றி தங்க நேரிட்டது . என்பதும் வேறு கதை .

No comments: