Wednesday, June 18, 2014

பச்சை நிறமே... பச்சை நிறமே.

 ஜெகஜால கில்லாடி திருடர்கள் உலகம் பூரா இருந்திருக்கிறார்கள்.  போலீசார் பைனாகுலர், டெலஸ்கோப் வைத்துப் பார்த்தாலும் அதிலும் மண்ணைத் தூவிவிட்டுப் போய்விடுவார்கள்.  அவர்களைக் கண்டுபிடிக்க ஸ்மார்ட்வாட்டர் டெக்னிக்கில் வசமாக சிக்கிய யாஃபத் அஸ்கல் என்ற திருடனின் போட்டோவை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.  ஆசாமியின் முகத்தில் ஆங்காங்கே பச்சை நிறமாக உள்ளது.  எப்படி வந்தது இந்த பச்சை?
     இவன் ஒரு கார் கொள்ளையன்.  லாவகமாக திறந்தோ,  கதவை உடைத்தோ காரில் இருக்கும் பொருள்களை லபக்கிவிடுவான்.  இவனை கையும் களவுமாக பிடிக்க போலீசார் ' பச்சை வலை ' விரித்தார்கள்.  போலீசார் செட்டப் செய்து வைத்திருந்த காரில் அவன் நுழைந்ததும்,  மெலிதான ஸ்மார்ட்வாட்டர் அவன் மீது தானியங்கி மூலமாக ஸ்பிரே செய்யப்பட்டது.
     தன் முகத்தில் அது படுவது அவனுக்குக் கூட தெரியாது.  பிறஊதாக் கதிர் வெளிச்சத்தை அவன் மீது பாய்ச்சினால்,  ஸ்மார்ட்வாட்டர் பட்ட இடமெல்லாம் பச்சை பச்சையாகத் தெரியும்.  சந்தேகப்படும் வகையில் நடமாடுபவர்களை புறஊதாக் கதிர் வெளிச்சத்தில் பார்த்தால் திருடனா,  அப்பாவியா என்பது தெரிந்துவிடும்.
     கோடீஸ்வர வீடுகளிலும் இந்த ஸ்பிரேவை வைக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.  ஸ்மார்ட்வாட்டர் வந்ததிலிருந்து இங்கிலாந்தில் கொள்ளைகள் கணிசமாகக் குறைந்திருக்கிறதாம்.
--- ரிலாக்ஸ்..
---   ' தி இந்து ' நாளிதழ். புதன், அக்டோபர் 2, 2013. 

No comments: