ரேஷன் கடை ஒன்றில் அன்று வரலாறு காணாத கூட்டம். ஏகப்பட்டவர்கள் பொருட்களை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
கடைசியாக வந்த ஒருவர் கியூவில் முன்னால் போக முயற்சி செய்தார். ஏற்கனவே நின்றுகொண்டிருந்தவர்கள் அவரைப் போக விடாமல் தடுத்தனர்.
' கடைசியா போயி நில்லுய்யா! ' என்று கத்தினார்கள்.
அவர் அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. முண்டியடித்துக் கொண்டு முன்னால் போக முயற்சி செய்தார். எல்லோரும் சேர்ந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்து பின்னால் நிறுத்தி விட்டார்கள்.
" இதோ பாருய்யா! நாங்க இருக்கிற வரைக்கும் நீ முன்னாடி போய் எதையும் வாங்க முடியாது... தெரிஞ்சிக்கோ!" என்றார்கள்.
" நான் இங்கே பின்னாடி நிக்கிற வரைக்கும் நீங்களும் முன்னாடிபோய் எதுவும் வாங்கமுடியாது!" என்றார் அவர்.
" ஏன்?"
" நாந்தான் ரேஷங்கடை ஊழியர். கடையைத் திறக்க வேண்டிய ஆள்!"
-- கே.செல்வேதிரன். ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ். செவ்வாய், அக்டோபர் 1, 2013.

No comments:
Post a Comment