Saturday, June 28, 2014

கிச்சன் குறிப்புகள்...

*  திடீர் என்று தயிர் தேவையா?  பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு,  சிறிது வினிகர் சேருங்கள்.  நிமிடத்தில் தயிர் ரெடி.
*  சமோசா மீந்து விட்டதா?  அதை பிரிட்ஜில் வைக்கும் பிரீசரில் வைத்து விடுங்கள்.  தேவைப்படும் போது இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எடுத்து
   குறைந்த தணலில் சூடு செய்து சாப்பிடலாம்.
*  பல்லி தொந்தரவு அதிகம் இருக்கிறதா?  மயில் இறகுகளை வீட்டில் ஆங்காங்கே சொருகி வையுங்கள்.  பல்லி காணாமல் போகும்.  வீடு அழகாகி விடும்.
*  சமையலுக்கு கடுகு, வெந்தயம் தாளிக்கும் போது சாதாரண கடுகு, வெந்தயத்தை தாளிக்காமல் முளைவிட்ட கடுகு, வெந்தயத்தை தாளித்தால் பார்க்க
   அழகாக இருப்பதோடு,  சத்தும் அதிகமாக கிடைக்கும்.
*  இனிப்பு பலகாரங்கள் செய்யும் போது ஏலக்காய் பருப்பை மட்டும் உபயோகித்துவிட்டு தோலை தூர எறிந்துவிடுவோம்.  அந்த தோலை எடுத்து வைத்து
   டீயில் போட்டு கொதிக்க வைத்தால் சுவையான ஏலக்காய் டீ ரெடி.
*  தினமும் ஒன்றிரண்டு பூண்டு அல்லது கிராம்பை மென்று சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்டிரால் குறையும்.
*  ஒரு டீஸ்பூன் இஞ்சிசாறு,  சிலதுளிகள் எலுமிச்சை சாறு,  கொஞ்சம் தேன் சேர்த்து குடிக்க நன்கு பசி எடுக்கும்.
--  தினமலர். பெண்கள் மலர். 14- 9 -2013.

No comments: